பக்கம் எண் :

46யுத்த காண்டம் 

''குலையும் இவ் உலகு'' எனக் கொண்டு, நான்முகன்  

கூறி,

''உலைவிலீர்! இதில் உறையும்'' என்று இரந்திட, 

உறைந்தார்.

 

மலையம் என்பது பொதியமாமலை - மலையம் என்பது 
பொதிய மாமலையாகும்; அதில் மறவோர் நிலையம் அன்னது 
சாகரத் தீவிடை நிற்கும்
-   அதில்   பிறந்த வீரராகிய இவர் 
இருப்பிடம் கடலில் உள்ள தீவில் இருக்கின்றது; 'இவ்உலகு குலையும்' 
எனக் கொண்டு - (இவர்கள் இங்கிருந்தால்) இந்த உலகமே அழியும்' 
என்று நினைந்து; உலைவிலீர்! இதில் உறையும் என்று நான்முகன் கூறி 
இரந்திட  உறைந்தார் - 'அழிவில்லாதவர்களே! இதில் தங்கி இருங்கள்' 
என்று  கூறிப் பிரமன் இரந்து வேண்டியதனால் அத்தீவில் தங்கி
இருந்தனர்.
 

(16)
 

9263.

'முக்கரக் கையர்; மூ இலை வேலினர்; முசுண்டி 

சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்; 

நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்; 

புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் - புகழோய்! 

 

புகழோய்! முக்கரக் கையர் மூஇலை வேலினர் - புகழினோய்
(இவர்கள்) மூன்று கைகளை    உடையவர்கள் (அவற்றில்) மூன்று
இலைகளை உடைய வேலினை உடையவர்கள்; முசுண்டி சக்கரத்தினர்;
சாபத்தர்; இந்திரன் தலைவர்
-  முசுண்டி  என்னும் ஆயுதத்துடன்
சக்கரத்தை  உடையவர்கள்,  வில்லை  ஏந்தியவர்கள், இந்திரனுக்கும் 
மேலான தகுதி உடையவர்கள்; நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் 
நாதர்
-   முதலைகள்   வாழுகின்ற   ஏழு கடல்களுக்கும் இறைமை 
பூண்டவர்கள்;  புக்கரப்  பெருந்தீவிடை  உறைபவர்- (இத்தகைய 
சிறப்பினரான  இவர்கள்)   புட்கரம்  என்னும்  பெரும்  தீவிடை
வாழ்பவராவர்.
 

கரக்கை - மீமிசைச்சொல். முசுண்டி - ஒருவகை ஆயுதம்.
சாபம் - வில்.   நக்கரம் - முதலை 'புட்கரம்' என்ற சொல்
எதுகை நோக்கி 'புக்கரம்' என நின்றது. 
 

(17)
  

9264.

'மறலியை, பண்டு, தம் பெருந் தாய் சொல, வலியால், 

புற நிலைப் பெருஞ் சக்கர மால் வரைப் பொருப்பின்,