பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்47

விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்; 

இறலி அப் பெருந் தீவிடை உறைபவர் - இவர்கள். 

 

இவர்கள் இறலி அப்பெருந் தீவிடை உறைபவர்- இவர்கள்
இறலி என்கின்ற   அந்தப்  பெரிய   தீவில் வாழ்பவர்கள்; பண்டு 
பெருந்தாய்   சொல   தம்   வலியால் மறலியை
- முன்பு (தம்) 
பெருமையுடைய    தாய்   சொல்லத்தமது  வலிமையினால் எமனை;
புறநிலைப்   பெருஞ்சக்கர   மால்வரைப்   பொருப்பின்-
(ஏழுலகங்கட்கும்)   புறத்தே  நிலைத்துள்ள   பெரிய   சக்கரவாளம்
என்கின்ற   பெரிய  மலையில்;   விறல் கெடச் சிறையிட்டு அயன்
இரந்திட விட்டோர்
-   அவனுடைய   வலிமை  கெட வென்று
சிறைவைத்துப் பின்பு பிரமன் இரந்து வேண்டியதால் அவனை
விடுத்தவர்கள்;
 

இறலி - இத்தி என்றும் மருதமரம் என்றும் கூறுவர்.
சக்கரவாளகிரி மணி. 6. 355 உரைக்குறிப்புக் காண்க. 
 

(18)
 

9265.

'வேதாளக் கரத்து இவர், ''பண்டு புவியிடம் விரிவு 

போதாது உம்தமக்கு; எழு வகையாய் நின்ற புவனம், 

பாதாளத்து உறைவீர்'' என, நான்முகன் பணிப்ப, 

நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால், இவண்

நடந்தார்.

 

நாதா! வேதாளக் கரத்து இவர்- தலைவனே! வேதாளத்தின்
கையைப் போன்ற கையை உடைய இவர்கள்; நான்முகன் 'பண்டு
உம்   தமக்கு   புவியிடம் விரிவு போதாது
- நான்முகனாகிய
பிரமன் முற்காலத்து,  ''உமக்கு  இந்நிலவுலகத்தின்  பரப்பு விரிவு 
போதாது ஆதலால்; எழுவகையாய் நின்ற புவனம் பாதாளத்து 
உறைவீர் எனப் பணிப்ப
- ஏழு வகையாக நின்ற புவனங்களில் 
பாதாளத்தில் தங்குவீர்களாக'' எனக் கட்டளை இட; புக்கு இருந்து, 
உனக்கு  அன்பினால்  இவன்  நடந்தார்
-  அங்கு  சென்று 
வாழ்ந்திருந்து உன்பால் கொண்ட அன்பால் இங்கு வந்தவர்களாவர்.
 

வேதாளம் - பேய் எனினுமாம். ''வேதாளம் சேருமே
வெள்ளெருக்குப் பூக்குமே'' (நல்வழி - 23) 
 

(19)
 

9266.

'நிருதி தன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்; 

''பருதி தேவர்கட்கு'' எனத் தக்க பண்பினர்; பானக்