பக்கம் எண் :

48யுத்த காண்டம் 

குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்; 

இருள் நிறத்தவர்; ஒருத்தர் ஏழ் மலையையும்

எடுப்பார்.

 

இருள் நிறத்தவர் நிருதி தன்குலப் புதல்வர்- இருள்
போன்ற   நிறத்தினை   உடைய   இவர்    நிருதி என்னும்
திசைக்காவலனது   குலப்   புதல்வர்கள்; நின் குலத்துக்கு
நேர்வர்
- (தகுதிகளில்)   நின் குலத்துக்கு ஒப்பானவர்கள்;
''தேவர்கட்குப் பருதி''   எனத்  தக்க   பண்பினர்-
'தேவர்கட்குச் சூரியன்'  என்னத்   தக்க பண்புடையவர்கள்;
பானக் குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பர்-
பருகுவதற்கு உரிய உதிரம் பெறாமற் போவாரே ஆயின் ஏழு
கடல்களையும்   பருகிவிடக்   கூடியவர்;   ஒருத்தர் ஏழ் 
லையையும் எடுப்பர்
- ஒருவரே ஏழு மலைகளையும் எடுக்கத் 
தக்க மிடுக்குடையவர்.
 

நிருதி - தென்மேற்குத் திசையின் காவலனாம். இவன் மனைவி
தீர்க்காதேவியின் வயிற்றுப்பிறந்த மக்கள் இப்படையினராம். வீரம், 
தவம் முதலான தகுதிகளில் இராவணன் குலத்துக்கு ஒப்பானவர் 
என்பதாம். தேவர்களில்   பருதி சிறந்திருத்தல் போல அரக்கரில் 
இவர் சிறந்தவர்.   நிருதி   பெண் மகள் என்றலும் ஒரு கருத்து. 
''இந்திரன்   கலையா   யென் மருங்கிருந்தான், அக்கினி உதிரம் 
விட்டகலான்.   எமனெனைக்    கருதா னரனெனக் கருதி, நிருதி 
வந்தென்னையென்   செய்வாள்;   அந்தமாம்  வருணனிருகண் 
விட்டகலான்'' (தனிப்பா) என்றவிடத்துக் காண்க. 
 

(20)
 

9267.

'பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த 

காரணத்தின், ஆதியின் பயந்த பைங் கழலோர்; 

பூரணத் தடந் திசைதொறும் இந்திரன் புலரா 

வாணத்தினை நிறுத்தியே, சூடினர் வாகை. 

 

பார் அணைத்த வெம் பன்றியை- பூமிதேவி, தன்னை
அணைத்தெடுத்த  வராக மூர்த்தியை; அன்பினால் பார்த்த
காரணத்தின்
- அன்பினால் பார்த்த காரணத்தினால்; ஆதியின் 
பயந்த  பைங்கழலோர்
- திருமாலாற்  பெறப்பட்ட பசிய 
பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை உடையவர்கள்; பூரணத் 
தடந்திசை தொறும்
- முழுமையான பெருந்திசைகள் தோறும்; 
புலராவாரணத்தினை நிறுத்தியே இந்திரன் வாகை சூடினர் 
- மதம்   வற்றாத  தம்முடைய   யானைகளை (வென்றதற்கு
அடையாளமாக) நிறுத்தி இந்திரனை வென்ற வெற்றி மாலையைச்
சூடினர்.