பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்49

இந்திரனை வென்றமைக்கு அறிகுறியாக திசையானைகளை
விலக்கித்   தமது   யானைகளை  அவ்விடத்தில் நிறுத்தினர்
என்பது கருத்து. ஒன்றார் இகல் அற நூறித்தன் மதவாரணந்,
திசைதொறு நிறுவிய - சீயகங்கன்'' என்றதும் காண்க. 
 

(21)
 

9268.

'மறக் கண் வெஞ் சின மலை என இந் நின்ற  

வயவர்,

இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற 

இகலோர்;

அறக் கண் துஞ்சிலன், ஆயிரம் பணந் தலை  

அனந்தன்,

உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து 

ஒறுக்க.

 

மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர்- கொடுங்
கண்ணையும் கடும் சினத்தையும் உடைய மலை போல இங்கு நின்ற
வீரர்கள்; இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர்
- (தன்னினும்) இறக்கமுடைய கீழிடம் இல்லாத, பாதலத்தில் வாழ்கின்ற
வலிமையுடையோராவர்; ஆயிரம் பணந்தலை அனந்தன் அறக்கண்
துஞ்சிலன்
-   ஆயிரம்   படத்தோடு   கூடிய தலைகளை உடைய
ஆதிசேடன்   முழுவதும்   கண்  துஞ்சாமல்; உறக்கம் தீர்ந்தனன்.
உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க
- உறக்கம் நீங்கினவனாய்த்
தங்கி இருப்பது இவ்வீரர் அவனைத் தொடர்ந்து வருத்துதலாலேயாம்.
 

(22)
 

9269.

'காளியைப் பண்டு கண்ணுதல் காட்டியகாலை, 

மூள முற்றிய சினக் கடுந் தீயிடை முளைத்தோர்; 

கூளிகட்கு நல் உடன்பிறந்தார்; - பெருங் குழுவாய் 

வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும், 

வருவார்.

 

பெருங்குழுவாய்   வாள்  இமைக்கவும்,  வாள்  எயிறு 
இமைக்கவும் வருவார்
 - பெருங் கூட்டமாக, வாள் ஒளி வீசவும், 
வாள் போன்ற பற்கள் ஒளி வீசவும் வருகின்றவர்களாகிய இவர்கள்; 
கண்ணுதல்    பண்டு    காளியைக்  காட்டிய   காலை
 
நெற்றிக்கண்ணை உடைய இவன் முற்காலத்தில் காளியை வெல்ல 
ஊர்த்துவ தாண்டவம் செய்து காட்டிய காலத்தில்; மூள முற்றிய
சினக்கடுந் தீயிடை