வெதும்பியது போல இராவணன் தன்னிடத்துத் தோன்றிய புத்திர சோகத்தினால் வெதும்பினான் என்றார். |
(7)
|
9193. | திருகு வெஞ் சினத் தீ நிகர் சீற்றமும், |
| பெருகு காதலும், துன்பும், பிறழ்ந்திட, |
| இருபது என்னும் எரி புரை கண்களும், |
| உருகு செம்பு என, ஓடியது ஊற்று நீர். |
|
திருகுவெஞ்சினத்தீ நிகர் சீற்றமும்- (பகைவர் மேலெழுந்த) மாறுபட்ட கொடிய சினம் என்று சொல்லப்படுகின்ற தீயை ஒத்த சீற்றமும்; பெருகு காதலும், துன்பும் பிறழ்ந்திட - (மகன் மேல்) பெருகுகின்ற அன்பும் (அவன் இறந்தமையால்) துன்பமும் மாறி மாறித் தோன்றுதலால்; இருபது என்னும் எரிபுரை கண்களும் - இராவணனுடைய தீயை ஒத்த இருபது என்ற எண்ணிக்கையை உடைய கண்களும்; ஊற்று நீர் உருகு செம்பு என ஓடியது- ஊற்றுகின்ற துன்பக் கண்ணீர் உருகிய செம்பு போலப் பெருகி ஓடியது. |
(8) |
9194. | கடித்த பற் குலம், கற் குலம் கண் அற |
| இடித்த காலத்து உரும் என எங்கணும், |
| அடித்த கைத்தலம் அம் மலை, ஆழி நீர், |
| வெடித்த வாய்தொறும் பொங்கின, மீச் செல. |
|
கற்குலம் கண் அற- மலைக்கூட்டங்கள் துகளாக அற்றுப் போமாறு; இடித்த காலத்து உரும் என எங்கணும் - 'மேகம் இடித்த காலத்துத் தோன்றும் இடியொலியே' என எவ்விடத்தவரும் பேசுமாறு; பற்குலம் கடித்த- இராவணனது பல்வரிசைகள் கடித்தன; அம்மலை வெடித்தவாய் தொறும் ஆழிநீர் பொங்கின மீச்செல- அத்திரிகூட மலை வெடித்த வாய்தொறும் கடல் நீர் பொங்கி மேல் வழியுமாறு; கைத்தலம் அடித்த - அவன் கைகள் தரையில் மோதின. |
(9) |
9195. | 'மைந்தவோ!' எனும்; 'மா மகனே!' எனும்; |
| 'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும்; |
| 'முந்தினேன் உனை; நான் உளெனோ!' எனும்;- |
| வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான். |