முளைத்தோர்- (அந்தக் காளியின்) மூளுமாறு முதிர்ந்த சினமாகிய கடுமையான நெருப்பில் தோன்றியவர்கள்; கூளிகட்கு நல்உடன் பிறந்தார் - பேய்கட்கு நல்ல உடன்பிறப்புப் போன்றவர்கள். |
காளியை நடனத்தில் வெல்லச் சிவன் ஒரு காலைத் தலையில் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் புரியக் காளி அங்ஙனம் செய்து காட்டி வெல்ல முடியாமையால் நாணிச் சினங்கொள்ள, அச்சினத்தீயில் தோன்றியவர்கள். |
(23) |
| 9270. | 'பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்; |
| தீவம் தோன்றிய முழைத் துணை எனத் |
| தறுகண்ணார்; |
| கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் |
| கொடியோர்;- |
| சாவம் தோன்றிட, வட திசைமேல் வந்து சார்வார். |
| |
சாவம் தோன்றிட வட திசை மேல் வந்து சார்வார்- வில் கையில் தோன்றிட வடதிசைமேல் வந்து தோன்றுகின்ற இவர்கள்; பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்- பாவம் தோன்றிய காலத்திலே தோன்றிய பழையவர்; தீவம் தோன்றிய துணை முழை எனத் தறு கண்ணார் - விளக்கு மிளிர்கின்ற இரண்டு குகைகளென்று சொல்லுமாறு (தோன்றி) பயம் விளைக்கின்ற விழிகளுடன் கூடியவர்கள்; கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர்- கோபம் வந்தால் தாயையும் உயிர் உண்கின்ற கொடியவர்கள் ஆவர். |
கண்ணோட்டமற்ற கோபமுடையவர் என்பதனைக் குறிக்க ''தாயையும் உயிருணும் கொடியார்'' எனக் கூறினார். |
(24) |
| 9271. | 'சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான், |
| ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்; |
| கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலுடை, கொடுமைக்கு |
| ஊற்றம் ஆகி, பண்டு உதித்தனர் என்பவர், உவரால். |
| |
இவர் சீற்றம் ஆகிய ஐம்முகன்- இவர்கள், சீற்றம் மிக்கவனாகிய ஐந்து முகங்களை உடைய சிவன்; உலகு எலாம் தீப்பான் ஏற்றமாநுதல் விழியிடைத் தோன்றினர்- உலகம் முழுவதையும் எரிக்கும்படி கொண்டுள்ள பெரிய நெற்றிக் கண்ணில் பிறந்தவர்கள்; உவர், ஐம்பாலுடைக் கூற்றம் ஆகிய |