கொம்பின்- அதோ அங்கிருப்பவர் கூந்தலைக் கொண்ட யமன் என்று கூறத்தக்க ஓர் பெண்ணின், கொடுமைக்கு ஊற்றம் ஆகி, பண்டு உதித்தனர் என்பவர்- கொடுமைக்கு ஊன்றுகோலாக முற்காலத்தில் தோன்றியவர் எனப்படுவார். |
ஆல் - ஈரிடத்தும் அசை, சிவபிரான் சங்காரத் தொழில் முதலிரண்டடிகளில் குறிக்கப் பெறுகின்றது. அங்ஙனம் அழிவு செய்யுங் காலத்து அவ்விழியினின்றும் தோன்றியவர் என்பதாம். ஈசனின் ஐந்து முகங்களாவன, 1. ஈசானம், 2. தற்புருடம், 3. அகோரம், 4. வாமதேவம், 5. சத்யோசாதம் என்பனவாம். ஐம்பால் - கூந்தல். இவர்களை ஆதியில் பெற்ற தாய் கூற்றுப் போன்ற கொடுமையுடையளாய் இருந்தாள் என்பதனை இங்ஙனம் குறித்தார். கொம்பு - உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறித்தது. |
(25) |
| 9272. | 'காலன் மார்பிடைச் சிவன் கழல் பட, பண்டு கான்ற |
| வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர், |
| சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந் நின்ற தொகையார், |
| ஆலகாலத்தில், அமிழ்தின், முன் பிறந்த போர் |
| அரக்கர். |
| |
சூலம் ஏந்தி முன் நின்றவர் - சூலம் ஏந்திக்கொண்டு நம்முன் நின்ற இவர்; காலன் மார்பிடைச் சிவன் கழல் பட - எமனுடைய மார்பில் சிவனது திருவடி படுதலால்; பண்டு கான்ற வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் - முன்பு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தில் தோன்றிய வீரர் ஆவார். இந்நின்ற தொகையார் ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்தபோர் அரக்கர் - இங்கு நின்ற குழுவினர் ஆலகாலத்தில் அமிழ்திற்கு முன்னாகப் பிறந்த போர்த்திறன் மிக்க அரக்கராவார். |
காலன் - உரிய காலத்தில் உயிர்களைக் கவர்ந்து செல்லும் யமன். ''காலனும் காலம் பார்க்கும்'' (புறநா - 41) என்பது காண்க. மார்கண்டேயனுக்காக சிவபெருமான் காலாலுதையுண்ட யமன் கக்கிய இரத்தத்தினின்றும் தோன்றியவர். 'சூலம் ஏந்தி முன்னின்றவர்' என்றும், தொகையாக நின்றோர் பாற்கடல் கடைந்த காலத்து முன்பு தோன்றி வந்த ஆலகால விடத்தில் அமிழ்துக்கு முன்பு தோன்றியவர்' என்றும் கூறப்பட்டது. |
(26) |
| 9273. | 'வடவைத் தீயினை, வாசுகி கான்ற மாக் கடுவை |
| இட, அத் தீயிடை எழுந்தவர், இவர்; இன மழையைத் |