பக்கம் எண் :

52யுத்த காண்டம் 

தடவ, தீ நிகர் குஞ்சியர் இவர்; உவர், தனித் தேர் 

கடவ, தீந்த வெம் புரத்திடைத் தோன்றிய கழலோர். 

 

இவர் வாசுகி கான்ற மாக்கடுவை- இவர்கள் (பாற்கடல்
கடைந்தபொழுது)   வாசுகி   என்னும் அரவம் கக்கிய கொடிய
நஞ்சினை; வடவைத் தீயினை இட, அத்தீயிடை எழுந்தவர்-
வடவா முகாக்கினியில் இட அத்தீயிடத்துத் தோன்றியவர்; இவர் 
இன   மழையைத்  தடவ   தீநிகர்  குஞ்சியர்
- இவர்கள் 
தொகுதியான  மேகத்தைத்  தடவா  நிற்கும்  தீப்போலும் சிவந்த
குஞ்சியை உடையவராய்ப் பருத்துள்ளவர்கள்; உவர், தனித்தேர் 
கடவ, தீந்த வெம்புரத்திடைத் தோன்றிய கழலோர்
- அதோ 
நிற்கின்ற அவர்கள் (பிரமனால் செலுத்தப் பெற்ற) ஒப்பற்ற தேரினை 
செலுத்தியதினால்   வெந்த   முப்புரங்களினிடையில்   தோன்றிய 
கழலணிந்த வீரர்களாவர்.
 

வடவைத்தீ - பெண்  குதிரையின்   முகத்துடன் கடலின் கண்
மறைந்து நின்று ஊழிக்காலத்து வெளிப்பட்டு  உலகினை அழிக்கும் 
மாபெருந்தீ.    அத்தீயில்   கடல் கடைந்த காலத்து வாசுகி என்ற 
அரவங் கக்கிய ஆலகால விடம் படப் பிறந்தவர்களும், வானளாவிய 
நெடிய  தோற்றத்தையும்  சிவந்த  தலைமுடியினையும் உடையவரும், 
பிரமனால்  செலுத்தப்  பெற்ற  ஒப்பற்ற  தேரிலிருந்து இறைவனால் 
அழிக்கப்பெற்ற       முப்புரங்களின்        அழிவினின்றும் 
தோன்றியவர்களுமாகிய அரக்கர்கள் இங்கு கூறப்பெற்றனர். 
 

(27)
 

9274.

'இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு  

இலர் - ஐய !-

நினையவும், குறித்து உரைக்கவும், அரிது; இவர் 

நிறைந்த

வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின், 

அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 

 

ஐய!  இனையர்  இன்னவர்  என்பது ஓர் அளவு இலர் - 
ஐயனே! இவர் இத்தன்மையர் என்று தனித்தனியே சொல்லுதற்குரிய 
சிறிய  அளவினர் அல்லர்; நினையவும், குறித்து உரைக்கவும்
அரிது
  -   இவர்கள்   தன்மை    நினைப்பதற்கும்,   குறித்துச்
சொல்லுதற்கும்   அரிது;   இவர்  நிறைந்த வினையமும் பெரு
வரங்களும்  தவங்களும்  விளம்பின்
-  இவர்  தம் நிறைந்த
வஞ்சகங்களும்,  பெற்ற   வரங்களும் அவ்வரங்களைப் பெற இவர்
செய்த தவங்களும் சொல்லத்