பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்53

தொடங்கின்; அனைய பேருகம் ஆயிரத்து அளவினும் அடங்கா-
அத்தன்மையான பெரிய ஊழிகள் ஆயிரத்தினும் அடங்காவாம்.
 

வினையம் - வஞ்சகம். அனைய என்பது நெஞ்சறி சுட்டாய்
மிகப்பல ஆண்டுகளை விளக்கின. 
 

(28)
 

9275.

'ஒருவரே சென்று, அவ் உறு திறல் குரங்கையும், 

உரவோர்

இருவர் என்றவர்தம்மையும், ஒரு கையோடு எற்றி, 

வருவர்; மற்று இனிப் பகர்வது என்? - வானவர்க்கு 

அரிய

திருவ!' என்றனர், தூதுவர். இராவணன் செப்பும்: 

 

வானவர்க்கு அரிய திருவ ! - தேவர்கட்கும் பெறுதற்கரிய
பெருஞ்செல்வத்தைப் பெற்றவனே! ஒருவரே சென்று அவ் உறு
திறல் குரங்கையும்
- இப்படையில் உள்ள ஒருவரே சென்று அந்த
மிக்க திறமையுடைய குரங்கையும்; உரவோர் இருவர் என்றவர்
தம்மையும்
-  வலியவர்   இருவர்  என்ற  இராம   இலக்குவர்
தம்மையும்; ஒரு கையோடு ஏற்றி வருவர்- ஒரு கையினால்
தாக்கி அழித்து வருவர்; மற்று இனிப் பகர்வது என்? என்றனர், 
தூதுவர். இராவணன் செப்பும்
- வேறு இனிச் சொல்லுவதற்கு 
என்ன இருக்கிறது? என்று தூதுவர் சொல்லக் கேட்ட இராவணன் 
சொல்லுவான்.
 

குரங்கு - இங்கு அனுமனைக் குறித்தது. உரவோர் - வலியவர்.
செப்பும் - செய்யும் என்னும் முற்று ஆண்பாற்கண் வந்தது.
 

(29)
 

9276.

'எத் திறத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து,  

இயன்ற

அத் திறத்தினை அறைதிர்' என்று உரைசெய, 

அவர்கள்,

'ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது' என  

உரைத்தார்,

பித்தர்; இப் படைக்கு 'எண் சிறிது' என்றனர், 

பெயர்ந்தார்.

 

இதற்கு எண் எத்திறத்து எனத்தொகை வகுத்து இயன்ற-
இப்படைக்கு எண்ணிக்கை எனைத்து என்று தொகையை வகுத்துப்
பொருந்திய; அத்திறத்தினை அறைதிர்' என்று உரை