செய- அந்த வகையினைக் கூறுங்கள்' என்று இராவணன் கேட்க; அவர்கள், ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது' என உரைத்தார் பித்தர் - அத்தூதுவர்கள் ஒத்த அளவினை உடைய வெள்ளம் ஓராயிரம் உளது' எனக் கூறினார்கள், அவர் பித்தராவார்; இப்படைக்கு 'எண் சிறிது' என்றனர், பெயர்ந்தார்- இப்படையின் அளவிற்கு 'அந்த எண் சிறிது' என்று கூறினராய்ச் சென்றார்கள். |
(30) |
| 9277. | 'படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், |
| என்பால் - |
| கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் |
| கிளத்தி, |
| அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், |
| அமைவுற்று, |
| உடைத்த பூசனை வரன்முறை இயற்ற' என்று |
| உரைத்தான். |
| |
நான் கிடைத்து அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி - (இராவணன் தூதுவரை நோக்கி) நான் அவர்களை நெருங்கி இருந்து இங்கு நிகழ்ந்துள்ள செய்திகள் எல்லாவற்றையும் விளக்கி; அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், அமைவுற்று - (என மனத்தே) பொருந்திய நல்ல இனிய சொற்களைச் சொல்லி அளவளாவி மனம் நிறைவுற்று; உடைத்த பூசனை வரன் முறை இயற்ற படைப்பெருங்குலத் தலைவரை - அவர்களுக்கு உரித்தான பூசனையை வரன் முறையாகச் செய்யப் படையிலுள்ள பெருஞ் சிறப்புடைய தலைவர்களை; கொணருதிர், என்பால் என்று உரைத்தான்- என்னிடம் கொணர்வீர்களாக என்று சொன்னான். |
குலம் - சிறப்பு, கிடைத்தல் - நெருங்குதல் ''விடைத்தனி யேறன்னானோர் விடலையோர் வேற்கணாள் முன் கிடைத்து'' (திருவிளை - திருமிக்கு - 42) உற்றுள பொருள் என்றது, இதுவரை போரில் நிகழ்ந்தனவற்றை. அளவளாவுதல் - ஒருவர்க்கொருவர் மனம் விட்டுப் பேசுதல். பூசனை என்றது வீரர்க்கு அளிக்கும் பெருஞ்சோறு முதலானவற்றை. |
(31) |
| 9278. | தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் |
| தொடர்ந்தார், |
| ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்; |