| போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் |
| தாள் |
| மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. |
| |
தூதர் கூறிட ஓத வேலையின் நாயகர் எவரும்- தூதுவர் இராவணன் ஆணையைக் கூறவும் பெருக்கெடுத்த கடல்போற் பரந்த சேனைத் தலைவர் எல்லோரும்; திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார் வந்து உற்றார்- திக்குகளிலெல்லாமிருந்து அணி வகுத்து வந்தவராய்; இராவணன் பொலன்தாள் போது தூவினர் - இராவணனுடைய அழகிய பாதங்களில் மலர் தூவினவராய்; மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட வணங்கினர் - மகுடத்தோடு மகுடம் மோதுவதால் உளதாய பெரிய ஒலிவானை முட்டுமாறு ஒருவர்க்கு ஒருவர் முற்பட்டு வணங்கினர். |
ஓதம் - நீர்ப்பெருக்கு, ''திரைய வீங்கோதம் தந்து'' (சிலம் கானல் வரி - சார்த்துவரி) 'போது' - மலரும் பருவத்தரும்பு 'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி' (குறள் - 1227) |
(32) |
| 9279. | அனையர் யாவரும் அருகு சென்று, அடி முறை |
| வணங்கி, |
| வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஓர் |
| வேலை, |
| 'நினையும் நல் வரவு ஆக, நும் வரவு!' என நிரம்பி, |
| 'மனையும் மக்களும் வலியரே?' என்றனன், |
| மறவோன். |
| |
அனையர் யாவரும் அருகு சென்று அடிமுறை வணங்கி- (அவ்வாறு) அப்படைத்தலைவர் யாவரும் இராவணன் அருகிற் சென்று அவனடிகளை முறையாக வணங்கி; வினையம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஓர் வேலை- பணிவு பொருந்தினவராய் இனிதாக அங்கு இருந்தபோது; மறவோன், நும் வரவு நினையும் நல்வரவு ஆக! என நிரம்பி- பெருவீரனாகிய இராவணன் (அவர்களை நோக்கி) நும் வரவு யான் நினைக்கின்றபடி நல்வரவு ஆவதாக! என்று வரவேற்புச் செய்து முடித்து; 'மனையும் மக்களும் வலியரே?' என்றனன் - 'நும் மனைவியும் மக்களும் மெலிவின்றி வலியராக இருக்கின்றனரோ' என நலம் உசாவினான். |