பக்கம் எண் :

56யுத்த காண்டம் 

வினையம் - பணிவு. நினையும் நல்வரவாவது - இராம இலக்குவரை
வென்றழித்தலாம். வலியரே? என்றது நலமாக உள்ளனரோ? என
வினவியவாறாம். 
 

(33)
 

9280. 

'பெரிய திண் புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்; 

உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு  

ஒன்றோ?

இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை; 

அரியது என் எமக்கு?' என்றனர், அவன் கருத்து 

அறிவார்.

 

அவன் கருத்து அறிவார்- அவ்விராவணனது கருத்தை 
அறியும் நோக்கத்தினராய் (படைத்தலைவர் இராவணனை நோக்கி);
பெரிய திண்புயன் நீ உளை தவ வரம் பெரிதால்- பெரிய
வலிமையான தோள்களை  உடைய தலைவன் நீ இருக்கின்றாய்;
யாங்கள் தவத்தினால்  பெற்றுள்ள வரமும்  மிகப்பெரிது; உரிய
வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ
- நமக்கு
உரியனவாய் வேண்டியுள்ள காரியங்களை யெல்லாம் முடிப்பதற்கு
அரிதோ? தேவரை இரியல் கண்டனம் பகை பிறிது இல்லை-
தேவரைத் தோற்றோடச் செய்து விட்டோம்; வேறு பகையும்
இல்லை; அரியது என் எமக்கு என்றனர் - எமக்குச்
செய்தற்கரியது என் உளது என்றனர்.
 

உளை - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஒன்றோ? என்பது 
'ஒரு பொருட்டோ?' என்னும் பொருளது. 
 

(34)
 

9281. 

'மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் 

பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்; 

யாது காரணம்? அருள்' என, அனையவர்  

இசைத்தார்;

சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான். 

 

நின் மருங்கு இருந்தார் மாதரார்களும் மைந்தரும்-
நின்பக்கத்து   இருந்தவர்களாகிய   பெண்டிர் பிள்ளைகளில்;
பேது உறாதவர்  இல்லை  நீ பெரிதும் வருந்தினை-
கலக்கமுறாதவர்கள்    இல்லை   நீ  பெரிதும் வருந்திக்
கொண்டிருக்கின்றாய்;   யாது காரணம்? அருள்'' என 
அனையவர் இசைத்தார்
- யாது காரணம்? அருள் செய்க' 
என அப்படைத் தலைவர் வினவினார்; சீதை