காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் - (இராவணன்) சீதை மேல் வைத்த காதலால் உண்டான தன்மைகள் எல்லாவற்றையும் அவர்கட்குத் தெரிவித்தான். |
(35) |
9282. | 'கும்பகன்னனோடு இந்திரசித்தையும், குலத்தின் |
| வெம்பு வெஞ் சினத்து அரக்கர்தம் குழுவையும், |
| வென்றார் |
| அம்பினால், சிறு மனிதரே! நன்று, நம் ஆற்றல்! |
| நம்ப! சேனையும் வானரமே!' என நக்கார். |
|
நம்ப- நமது தலைவனே! கும்பகர்ணனோடு இந்திரசித்தையும்; குலத்தின் வெம்புவெஞ் சினத்து அரக்கர் தம் குழுவையும்- நம் குலத்தில் பிறந்த மனம் வெதும்புகின்ற கொடிய கோபத்தையுடைய அரக்கர் தம் கூட்டத்தையும்; அம்பினால் வென்றார் சிறு மனிதரே! சேனையும் வானரமே!- அம்பினால் வென்றவர்கள் சிறிய மனிதர்களா? அவர் சேனையும் குரங்கா? நம் ஆற்றல் நன்று! என நக்கார் - நமது வலிமை நன்று! என்று படைத்தலைவர்கள் சிரித்தனர். |
(36) |
9283. | உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, |
| ஓர் ஏழ் |
| மலையை வேரொடும் வாங்க அன்று, அங்கையால் |
| வாரி |
| அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, |
| அழைத்தது; மலரோடு |
| இலைகள் கோதும் அக் குரங்கின்மேல் ஏவக்கொல், |
| எம்மை?' |
|
எம்மை அழைத்தது - (நீ) எம்மை இங்கு வரவழைத்தது; உலகைச் சேடன்தன் உச்சி நின்று எடுக்க அன்று- உலகத்தை ஆதிசேடனது உச்சியினின்றும் எடுப்பதற்கு அன்று; ஓர் ஏழ் மலையை வேரொடும் வாங்க அன்று - ஒப்பற்ற ஏழு குலமலை மகளை வேரோடும் பறிக்க அன்று; அங்கையால் வாரி அலைகொள் வேலையைக் குடிக்க அன்று - உள்ளங்கையால் அள்ளி அலைகளைக் கொண்ட கடலைக் குடிக்கவும் அன்று; மலரோடு இலைகள் கோதும் அக்குரங்கின் மேல் ஏவக்கொல்?- மலர்களோடு |