இலைகளைக் கோதித்தின்னுகின்ற அந்தச் சிறிய குரங்கின் மேல் ஏவுதற்குத்தானோ? |
(37) |
9284. | என்ன, கை எறிந்து, இடி உரும்ஏறு என நக்கு, |
| மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் |
| விலக்கி, |
| வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன், |
| 'அன்ன மானுடர் ஆர் வலியாவது' என்று |
| அறைந்தான். |
|
என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு- என்று கூறிக் கைதட்டி இடிக்கின்ற இடியேறு போலச் சிரித்த; மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம்கையால் விலக்கி - மின்னுகின்ற வெள்ளிய பல்லினையுடைய அரக்கர்களை (அவ்வாறு சிரிக்காமல் இருக்கும்படி) தன் அகங்கையால் அமைத்து, விலக்கி விட்டு; புட்கரத்தீவுக்கு மன்னன் வன்னி என்பவன் - புட்கரம் என்னும் தீவினுக்கு அரசனாகிய வன்னி என்பவன்; அன்ன மானுடர் ஆர்? வலி யாது? என்று அறைந்தான் - அந்த மனிதர்கள் யார்? அவரது வலிமை எத்தகையது? என்று (இராவணனை நோக்கிக்) கேட்டான். |
மனிதர்களையும், குரங்குகளையும், அற்பமாக மதித்துச் சிரித்த படைத்தலைவர்களின் ஏளன நகையை கையமர்த்தி அடக்கிய புட்கரத் தீவின் மன்னனாகிய வன்னி கும்பகன்னனையும் இந்திரசித்துவையும் வென்றழித்தவர் சாதாரணவராக இருக்கமுடியாது என்ற கருத்தினால் அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என வினவினான் என்க. |
(38) |
மாலியவான் மனிதர் வலிமையை உரைத்தல் |
9285. | மற்று அவ் வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து, |
| 'உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம் |
| கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக் |
| கிற்றும், கேட்டிரால்' என்றனன், கிளத்துவான் |
| துணிந்தான்: |
|
மற்று அவ்வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து - (வன்னி கூறிய) அச்சொல்லைக் கேட்டவுடனே மாலியவான் முன்வந்து; உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும் - இது காறும் நடந்துள்ள |