பொன் அணி புட்பகப் பொருஇல் மானமும் - பொன்னால் அழகு பெற்ற புட்பகம் என்னும் பெயருடைய ஒப்பற்ற விமானமும்; மன்னவர்க்கு அரசனும் - அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி இராமபிரானும்; வந்து தோன்றினார் - வந்து அநுமன் கண்காணத் தோன்றினர். |
'தோன்றினார்' என்னும் வினைமுற்று 'புட்பக விமானமும் மன்னவர்க்கு அரசனும்' என்ற இரண்டையும் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தன ஆவதோர் முறை பற்றி இயைத்தது என்க. |
(305) |
அனுமன் பரதனுக்குக் காட்டிக் கூறுதல் |
10257. | 'அண்ணலே! காண்டியால் - அலர்ந்த தாமரைக் |
| கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப் |
| பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய |
| வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. |
|
அண்ணலே- பரதனே!; அலர்ந்த தாமரைக் கண்ணனும் - அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும் கண்களையுடையவனான இராமபிரானும்; வானரக் கடலும்- வானர சேனைச் சமுத்திரமும்; கற்புடைப் பெண் அருங்கலமும்- கற்பிற் சிறந்த பெண்டிர்க்கு அணிகலமாய சீதாபிராட்டியும்; நின்பின்பு தோன்றிய வண்ணவில் குமாரனும் - உனக்குப் பின்னால் பிறந்த அழகிய வில் ஏந்திய இலக்குவனும்; வருகின்றார்களை காண்டி- என இவர்கள் வந்து கொண்டிருப்பவர்களைப் பார்ப்பாயாக. |
வானரக் கடலை இடையே கூறியது, அதன் ஆர்ப்பொலி கேளாமையால் முன்பு பரதன் இராமனது வருகையை ஐயுற்றான் ஆதலின் என்க. ஆல் - அசை. |
| (306) |
10258. | 'ஏழ் - இரண்டு ஆகிய உலகம் ஏறினும் |
| பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர் |
| சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன் |
| ஊழியான்' என்று கொண்டு, உணர்த்தும் காலையே. |
|
ஊழியான் - யுக முடிவுக் காலத்தும் நிலை பெற்றுள்ளவனாகிய இராமபிரான்; ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்- பதினான்கு உலகங்களிலுள்ள அத்தனையும் தன்மேல் |