ஏறினாலும்; புறம் பாழ் கிடப்பது - புறத்தே வெற்றிடம் உள்ள தாயிருப்பதும்; படி இன்றாயது- தனக்குச் சமானம் இல்லாததும் ஆகிய; ஓர் சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்- ஒப்பற்ற ஒளி சுற்றிய விமானத்தில் காணப்படுகின்றான்; என்று கொண்டு உணர்த்தும் காலை- என்றிவ்வாறு (அநுமன் பரதனுக்கு) தெளிவிக்கும் சமயத்தில்; தொடரும். |
ஏ. அசை. |
(307) |
10259. | பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் |
| மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும், |
| அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன், |
| தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். |
|
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் - பொன்மயமாக விளங்குகின்ற மேருமலையின் குகைக்குள் நுழைந்த ஒரு மின்னல் விளங்கும் கருமேகம் போல இராமபிரான் காணப்பட்ட உடனே; அந்நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு - அந்த அயோத்தி நகரம் ஆரவாரித்த பேரோசை; இராவணன் தென் நகர்க்கு அப்புறத்து அளவும் சென்றது - இராவணனது தெற்கே உள்ள இலங்கை நகருக்கு அப்பாலும் சென்று ஒலித்தது. |
ஆல் அசை. |
(308) |
பரதன் இராமனைக் காணல் |
10260. | ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய |
| வானுடைத் தந்தையார் வரவு கண்டென, |
| கானிடைப் போகிய கமலக்கண்ணனை, |
| தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். |
|
கானிடைப் போகிய கமலக் கண்ணனை - காட்டிற்குச் சென்ற தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமனை; தானுடை உயிரினை - தன்னுடைய உயிராக உள்ளவனை; தம்பி - அவன் தம்பியாகிய பரதன்; ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய வானுடைத் தந்தையார் வரவு கண்டென நோக்கினான் - ஊன் பொதிந்த உடம்பைப் போகவிட்டு சத்தியத்தை விரும்பி |