வானுலகு சென்ற தசரத சக்கரவர்த்தியாகிய தன் தந்தையார் திரும்பி வருவது கண்டாற் போலப் பார்த்தான். |
''வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்'' (கம்ப. 4018) என்றதனை ஈண்டுக் கருதுக. முன்னர் 'இறந்தனன் தாதையை எதிர்கண் டென்னவே'' (கம்ப. 2427) என்று பரதன் இராமனைச் சந்தித்தது பற்றிக் கூறியதும் நினைக்கத்தகும். |
(309) |
10261. | கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம் |
| பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய் |
| சுட்டவன், மானவன் - தொழுதல் உன்னியே, |
| விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். |
|
மேன்மையான் - சிறந்த குணங்களுக்கு இருப்பிடமானவனாகிய பரதன்; முன்பு தாம் பட்ட வான்படர் - ஒருவர் தாம் முன்பு அடைந்த மிகப் பெரிய துன்பம்; கெட்டவான் பொருள் வந்து கிடைப்ப - தொலைத்து விட்ட சிறந்த பொருள் மீண்டும் கிடைத்துவிட அதனால்; ஒழிந்தவரின் - நீங்கப் பெற்றவரைப் போல; பையுள் நோய் சுட்டவன் - துன்ப நோயைத் தொலைத்தவனாய்; மானவன் தொழுதல் உன்னி - இராமனை வணங்கக் கருதி; மாருதி கரத்தை விட்டனன் - இதுவரை பிடித்திருந்த அனுமனது கைகளை இப்போது பிடி நெகிழ விட்டான். |
பரதன் அநுமன் கையைப் பற்றி வந்ததாக வான்மீகம் கூறவில்லை. கம்பரது கற்பனை இது. துன்பத்திற்குத் துணையாவாரைப் பற்றி வருதல் உலகியல்பு ஆதலின். |
(310) |
10262. | அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத் |
| திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச் |
| சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்; |
| உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். |
|
அக்கணத்து- (பரதன் கை நெகிழ்ந்த) அவ்வளவில்; அநுமனும் அவண் நின்று ஏகி - அநுமனும் அங்கிருந்து சென்று; அத்திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி- அந்த திசையளாவிப் பரந்த புட்பக விமானத்தை முறையாக அடைந்து; உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் - சிந்தி விழுகின்ற கண்ணீர் ஒழுகப் பெற்ற மார்பை உடையவனாய்; சக்கரத்து அண்ணலைத் |