பக்கம் எண் :

584யுத்த காண்டம் 

தாழ்ந்து முன் நின்றான் - இராமபிரானை வணங்கி முன்னே
நின்றான். 
 

(311)
 

10263.

'உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப் 

பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன், 

திருப் பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்; 

இருப்பன ஆயின, உலகம் யாவையும். 

  

திருப்பொலி மார்ப! - திருமகள் தங்கிய மார்பை
உடையவனே!; நாயினேன்- அடியேன்; உருப்பு அவிர்
கனலிடை  ஒளிக்கல் உற்ற அப் பொருப்பு அவிர்
தோளனைப்  பொருந்தி
  -   வெப்பம்   விளங்கும்
நெருப்பின்கண்  விழுந்து  உயிர்  துறக்கலுற்ற  அந்த
மலைபோல்  விளங்கும்  தோள்   உடைய  பரதனைச்
சென்றடைந்து;   நின்   வரவு    செப்பினேன்   -
நின்னுடைய   வருகையைச்   சொன்னேன்;  (அதனால்
அவன்  நெருப்பின் கண்  விழாதொழிந்தான் ஆகவே)
உலகம்  யாவையும்  இருப்பன  ஆயின - உலகம்
எல்லாம் உயிர்பெற்று வாழ்வனவாயின.
 

(312)
 

10264.

'தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா 

வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்! 

நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்ததால்; 

ஆயினும், அன்பினாய்! யாம் செய் மா தவம்.' 

 

மெய்ம்மையாய்! - உண்மையின் வடிவமானவனே!;
ஆயினும்  அன்பினாய்  -   தாயைக்   காட்டிலும்
பேரன்புடையவனே!; யாம் பல தீவினை   செய்ய  -
நாங்கள்   பல தீய செயல்களைச் செய்ய; தீர்வு இலா
வீவினை முறை முறை  விளைவ
-  அச்செயல்கள்
நீங்காமல்    கெடுதிகளை     முறை   முறையாகத்
தோற்றுவிப்பனவாயின; நீ அவை துடைத்து நின்று
அழிக்க நேர்ந்தது
- அனுமனாகிய நீ அத்தீமைகளை
அடியோடு  அழித்துப்  போக்கும்படி ஆகியது; யாம்
செய் மாதவம்
- நாங்கள் செய்த புண்ணியப் பயனாலே
ஆகும். (தொடரும்)
  

''தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, லீயாது அடி
உறைந்தற்று'' என்னும் குறள் (208) பல தீவினைசெய்ய தீர்வு
இலா வீவினை முறை முறை விளைவ'' என்னும் அடிகளில்
அமைந்திருத்தல் காண்க. ஆல் - அசை. 

(313)