புட்பக விமானம் கீழ் இறங்குதல் |
10269. | ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும் |
| வானவர் திரு நகர் வருவது ஆம் என, |
| மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் |
| தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். |
|
தான் உயர் புட்பகம் - மிக உயர்ந்த புட்பக விமானமானது; ஆனது ஓர் அளவையின் - அப்படிப்பட்ட நேரத்திலே; வானவர் திருநகர் அமரர் கோனொடும் வருவது ஆம் என- தேவர் தலை நகராய அமராவதி இந்திரனோடு கீழிறங்கி வருவதுபோல என்று சொல்லும்படி; மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் - விண்ணில் நிறைந்த விளங்கும் தேவர்கள் தூவுகின்ற மலர்களொடும்; நிலத்தைச் சார்ந்தது - நிலத்திடத்தை வந்தடைந்தது. |
ஆல் - அசை. |
(318) |
இராமன் வருகையால் அனைவரும் உற்ற நிலை |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
10270. | தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் |
| ஆனான்; |
| மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் |
| வந்தது ஒத்தான்; |
| ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை |
| ஆனான்; |
| நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் |
| புகுந்தாலும் ஒத்தான். |
|
(இராமன்) தாயருக்கு - தன்னைப் பிரிந்த தாய்மார்களுக்கு; அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் - பிரிந்து உடனே வந்தடைந்த கன்றின் தன்மையை ஒத்தவனாக ஆனான்; மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் - அவித்தையாகிய அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு எல்லாம்; மனோலயம் வந்தது ஒத்தான் - மனம் லயிக்குமிடமாகிய பரப்பிரம்மத்தோடு ஒன்றுபடும் தன்மை வந்து சேர்ந்தாற்போல ஆனான்; ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும்பாவை ஆனான்- தன் |