இரங்கத்தகும் நிலை எளிவருதல். தன்னைத் தந்தும் தன் குழந்தையின் எளிமையை நீக்குபவள் தாய் ஆதலன் 'தாய் போன்றான்' என்றார். உலகு என்பது உயர்ந்தோரைக் குறித்தது என்று கொண்டு அத்தகைய முனிவர்களுக்குத் தனது உண்மை வடிவம் மறையாது நன்கு தெரியும்படி 'ஒளிவரப் பிறந்தது' போன்றான் எனலும் ஒன்று. மகளிர் பரவசம் அடைந்தனர் இராமனைக் கண்டு என்க. |
(320) |
10272. | ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், |
| அனையன் நீங்க, |
| காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும் |
| மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த, |
| ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு |
பெற்றார். |
|
அவன் அலால்- அந்த இராமனையல்லாமல்; அங்கு ஆவி மற்று இன்மையால்- அயோத்தியில் உயிர் வேறு இல்லாமையால்; அனையன் நீங்க- அந்த இராமபிரான் அயோத்தியைப் பிரிந்து காடு செல்ல; காவி அம் கழனி நாடும் நகரமும் கவன்று வாழும் மா இயல் ஒண்கணாரும் மைந்தரும் - குவளை மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த கோசல நாடும் அயோத்தி நகரமும் கவலையால் வாடி வாழ்கின்ற மாவடு ஒத்த கண் உடைய மகளிரும் ஆடவரும்; வள்ளல் எய்த - இராமபிரான் மீண்டு வர; ஓவியம் உயிர் பெற்றன்ன- சித்திரம் உயிர் பெற்று எழுந்தாற்போல; உணர்வு பெற்றார் ஓங்கினர் - அறிவு வரப் பெற்றவர்களாய் இழந்த நலத்தைப் பெற்று உயர்ந்தனர். |
இராமன் அயோத்தியர் உயிர் என்பதை முன்னும் (கம்ப. 1380, 1352) கூறியுள்ளார். |
(321) |
10273. | சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், |
| பூவும், |
| எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் |
| யானை |
| வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் |
| மாதர் |
| கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த |
| அன்றே. |