பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்59

வற்றின் தன்மையையும், மனிதர்களின் வலிமையையும்; உடன்
ஆம்  கொற்ற   வானரத் தலைவர் தம் தகைமையும்
-
அம்மனிதரோடு வந்துள்ள வெற்றி பொருந்திய வானரத் தலைவர்
தம் பெருமையையும்; கூறக்கிற்றும் கேட்டிரால் என்றனன்
கிளத்துவான் துணிந்தான்
- சொல்லும் வல்லமையுடையேம்,
கேட்பீர்களாக என்று சொல்லத் துணிந்தான்.
 

ஊற்றம் - வலிமை,   கொற்றம் -  வெற்றி   கிற்றும் -
ஆற்றலுடையேம் வலிமையுடையேம் கில் - ஆற்றலுணர்த்தும்
இடைச்சொல். அதன்  அடியாகப்   பிறந்த 'கிற்றும்' என்பது
தன்மைப் பன்மை வினைமுற்றாம். சொல்லுபவை இராவணனுக்குப்
பிடிக்காதவையும், அவனது தோல்விகளுமாதலால் மாலியவான்
சொல்லத் துணிந்தான். 
 

(39)
 

9286.

'பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்; 

கரிய மால் வரை நிகர் கர தூடணர், கதிர் வேல் 

திரிசிரா, அவர் திரைக்கடல் அன பெருஞ் சேனை, 

ஒரு விலால், ஒரு நாழிகைப் பொழுதினின், உலந்தார். 

 

ஒருவிலால் பரிய தோளுடை விராதன், மாரீசனும் 
பட்டார்
- (இராமனுடைய)   ஒரே   வில்லினால் பருத்த 
தோள்களையுடைய விராதனும், மாரீசனும் இறந்து பட்டார்கள்; 
கரிய மால்வரை நிகர் கரதுடணர், கதிர்வேல் திரிசிரா
 
- கரிய பெரிய மலையை ஒத்தவரான கரனும், தூடணனும், ஒளி 
பொருந்திய   வேற்படையை   உடைய திரிசிராவும்; அவர் 
திரைக்கடல் அன பெருஞ்சேனை
- அவர்களுடைய 
அலைகடல் போன்ற  பெருஞ்சேனையும்; ஒரு நாழிகைப் 
பொழுதினின் உலந்தார்
  - ஒரு நாழிகைப் பொழுதினில் 
அழிந்துபட்டார்கள்.
 

இராமனுடைய ஒரு வில்லால் விராதன், மாரீசன், கரன்,
தூடணன், திரிசிரா முதலானவர்களும் அரக்கர் பெரும் படையும்
அழிந்தமை கூறப்பட்டது. 
 

(40)
 

9287.

'ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும் 

ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை? 

ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை, இந் நாள், 

பாழி மார்புஅகம் பிளந்து, உயிர் குடித்தது, ஓர் பகழி. 

 

ஆழி அன்னநீர் கடல் அனைத்தையும் ஊழிக்கால் எனக் -
கடலைப்போன்று பரவியுள்ள நீங்கள், கடல்கள் எல்லாவற்றையும்