சுண்ணமும் - வாசப் பொடியும்; சாந்தும் - சந்தனமும்; நெய்யும்- வாச நெய்யும்; சுரிவளை முத்தும் - வளைந்த சங்கீன்ற முத்தும்; பூவும்- எண்ணெயும் - கலின மா விலாழியும் - சேணம் பூட்டப் பெற்ற குதிரைகளின் நுரையும்; எண் இல் யானை வண்ண வார் மதமும் - கணக்கற்ற யானைகளின் நிறமமைந்த ஒழுக்காகிய மதநீரும்; நீரும் - மான்மதம் தழுவும் மாதர் கண்ண ஆம் புனலும் - கஸ்தூரி பூசிக்குளிக்கும் மகளிரது உடலில் வழிந்தோடும் நீரும்; ஓடிக் கடலையும் கடந்த- பெருக்கெடுத்துச் சென்று கடலையும் தாண்டிவிட்டன; |
அன்று, ஏ - அசை. அயோத்தி நகர மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கைப் புலப்படுத்தினர். |
(322) |
இராமன் வசிட்டனை வணங்கல் |
10274. | அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் |
| வேலை - |
| தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும் |
| புனையும் நூல் முனிவன்தானும், பொன் அணி |
| விமானத்து ஏற, |
| வனை கழல் குரிசில் முந்தி, மா தவன் தாளில் |
| வீழ்ந்தான். |
|
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி - எல்லோரும் அத்தன்மை உடையவர்களாய் மகிழ்ச்சிப் பெருக்கோடு விமானம் நெருங்கிய அளவில்; அருளின் வேலை தனை இனிது அளித்த தாயர் மூவரும் - அருள்கடலாகிய இராமனைப் பெற்ற தாய்மார்கள் மூவரும்; தம்பிமாரும்- பரத சத்துருக்கனன் ஆதியரும்; புனையும் நூல் முனிவன் தானும்- முப்புரிநூல் அணிந்த முனிசிரேஷ்டனான வசிட்டனும்; பொன் அணி விமானத்து ஏற- பொன்னால் அழகு பெற்ற விமானத்தின்கண் ஏற வர; வனைகழல் குரிசில- கட்டிய வீரக்கழலை உடைய இராகவன்; முந்தி- முற்பட்டுச் சென்று; மாதவன் தாளில் வீழ்ந்தான் - வசிட்ட முனிவனது திருவடிகளில் விழுந்து வணங்கினான். |
அயோத்தி மதிலுக்குப் புறம்பே கீழிறங்கிய விமானத்தில் அனைவரும் அயோத்தி செல்ல எறினர் என உணர்க. |
(323) |