பக்கம் எண் :

 மீட்சிப் படலம்591

10275.

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி  

கூறி,

அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, 

அன்பு கூர்ந்து,

விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ, 

வடித்த நூல் முனியும் முன்போல், வாழ்த்தினான்,  

ஆசி கூறி.*

  

மற்று அவ் இராமனை முனிவன் எடுத்தனன்-  அங்கே  இந்த
இராமனை  வசிட்ட   முனிவன்   தூக்கினான்;   அடுத்துள  துன்பம்
நீங்க   ஆசி   கூறி
  -  பிரிவினால்  உண்டாகிய துன்பம் நீங்கும்படி
ஆசீர்வாதம் செய்து;  அணைத்து  அணைத்து -  தழுவி;   விடுத்துழி
- விடுத்தவுடன்; இளைய வீரன்  -  இலக்குவன்;  வேதியன்  தாளில்
வீழ
- வசிட்டன் திருவடியில் வீழ்ந்து வணங்க; வடித்த நூல் முனியும்
-  தேர்ந்த    சாஸ்திர  வல்லுநனான   வசிட்டனும்;   முன்போல் -
இராமனுக்குச் செய்தது போலவே; ஆசி கூறி வாழ்த்தினான்.
 

அடுத்துள துன்பம் வசிட்டனதாகவும் இராமனதாகவும்  கொள்ளலாம்.
 

(324)
 

இராமன் தாயரை வணங்கல்
 

10276.

கைகயன் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, 

மற்றை

மொய் குழல் இருவர் தாளும் முறைமையின்

வணங்கு செங் கண்

ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் தழுவி, தம் தம் 

செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத்தொழிலும் 

செய்தார்.

  

முந்த - முற்பட;  கைகயன் தனயை  கால்  உறப்  பணிந்து  -
கேகயப்   தரசன்   மகளாகிய   கைகேயித்    தாயின்   திருவடிகளில்
நன்கு வணங்கி; மற்றை மொய்குழல் இருவர் தாளும்  முறைமையின்
வணங்கு  
-   ஏனை  நெருங்கிய   கூந்தலை   உடைய  கோசலை,
சுமித்திரை,  ஆகிய  இருவர் திருவடிகளையும் முறையாக வணங்குகின்ற;
செங்கண் ஐயனை - சிவந்த கண்களை உடைய