பக்கம் எண் :

592யுத்த காண்டம் 

இராகவனை;     அவர்கள்   தாமும்   அன்புறத்   தழுவி -
அத்தாய்மார்களும்  அன்பினால்  அணைத்து;  தம்  தம் செய்ய
தாமரைக்  கண்  நீரால்  மஞ்சனத்  தொழிலும்  செய்தார்
-
தம்முடைய  சிவந்த   தாமரை  மலர்  போன்ற   கண்களிலிருந்து
வருகின்ற கண்ணீரினாலே  நீராட்டும் தொழிலையும் செய்தார்கள்.
 

அன்பினால்     உண்டாகிய     கண்ணீர்ப்       பெருக்கால்
முழுக்காட்டினர் என்க. கைகேயி அன்னையை   முந்துறப் பணிந்தது
அவள் சாபம்  நீக்குதற்கு   என்க.   பலராலும்  பாதிக்கப்பட்டவள்
அவள் ஆதலின் அவள் துன்பம் பெரிதாயிற்று பெரிய பெருமாளுக்கு. 
 

(325)
 

சீதையும் இலக்குவனும் வணங்கல்
 

10277.

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் 

அடியில் வீழ்ந்தாள்;

தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்

பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் 

புல்லி,

'மன்னவற்கு இளவல் நீயே; வாழி!' என்று ஆசி 

சொன்னார்.*

  

அன்னமும்  -  சீதையும்;  முன்னர்ச் சொன்ன முறைமையின்
அடியில்  வீழ்ந்தாள் 
-  இராமன்   வணங்கியதாகச்   சொல்லிய
முறைப்படியே கைகேயி,  கோசலை,  சுமித்திரை  ஆகிய  தாய்மார்கள் 
திருவடியில் வணங்கினாள்;  தன்  நிகர் இலாத வென்றித் தம்பியும்
தாயர் தங்கள்  பொன்  அடித் தலத்தில் வீழ
- தனக்குச் சமானம் 
இல்லாத வெற்றியை  உடைய தம்பியாகிய இலக்குவனும் தாய்மார்களது 
பொலிவுற்ற  திருவடிகளில்  வீழ்ந்து  வணங்க; தாயரும் பொருந்தப் 
புல்லி
-  தாய்மார்களும்  நன்கு தழுவி; மன்னவற்கு நீயே இளவல்
வாழி  என்று  ஆசி சொன்னார்
- இராமனுக்கு நீயே தம்பியாவாய்
வாழ்க என்று மங்கலம் உரைத்தார்கள். 
 

(236)
 

 பரதன் இராமனை வணங்கல்.

 
10278.

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி, 

பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,