பக்கம் எண் :

 மீட்சிப் படலம்593

நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற  

நம்பி,

ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது  

சோர்வான்.

 

நின்ற நம்பி - அங்கு நின்ற ஆடவர்  திலகனாய  இராகவன்;
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி - திருவடி
நிலையாகிய பாதுகை  இரண்டையும்  தன்  உள்ளத்து  அன்பையும்
அவ்விராகவனது திருவடிக்கீழ் தங்குவதாகச்  சேர்ப்பித்து; பூ  அடி
பணிந்து வீழ்ந்த  பரதனை 
-  தன்  மலர்  போன்ற  அடிகளில்
வணங்கி விழுந்த பரதனைப் பார்த்து;  பொருமி  விம்மி- புலம்பி
விம்மி;  நாவிடை  உரைப்பது  ஒன்றும்  உணர்ந்திலன்  - தன் 
நாவால் சொல்லத்தகும் வாசகம்  ஒன்றும்  உணராதவனாய்;  அழுது
சோர்வான்
-   புலம்பிச்  சோர்ந்து;  ஆலியும்  உடலும்  ஒன்ற
தழுவினன்
- உயிரும் உடலும் ஒன்றாகுமாறு தழுவினான்.
 

முன்பு பெற்ற பாதுகையை இப்போது அன்போடு முன் வைத்து
வணங்கினான். 
 

(327)
 

10279.

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும் 

விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் 

செவ்வி

வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை 

கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை 

அன்னான்.

 

தழுவினன் நின்ற காலை- இப்படி இராமன் பரதனைத்
தழுவியபோது; தத்தி வீழ் அருவி காலும் விழு   மலர்க்
கண்ணீர் மூரி வெள்ளத்தால்
- தவழ்ந்து வருகின்ற அருவி
போன்ற சிறந்த மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய வலிய
நீர்ப்    பெருக்கினால்;   முருகின்   செவ்வி   வழுவுற  -
இளமையழகின் சிறப்பு குலையும்படி; பின்னி -  முறுக்கி;   மூசு
மாசு உண்ட சடையின் மாலை
- மொய்க்கின்ற அழுக்கு   தின்ற
சடைக்கற்றையை; கழுவினன் - கழுவியவனாய்; உச்சி மோந்து-
பரதனது உச்சியை முகர்ந்து; கன்று காண் கறவை அன்னான்-
தன் கன்றைக் கண்ட பசுவைப் போல ஆயினன்.
 

 (328)