இலக்குவன் பரதனை வணங்கல் | 10280. | அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி | | அடியது ஆக, | | கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் - படுத்த | | காளை, | | துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், | | தோலின் | | வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் | | தாளின் வீழ்ந்தான். | | அனையது ஓர் காலத்து- அந்த நேரத்தில்; கனை கழல் அமரர் கோமான் கட்டவன் படுத்த காலை- செருக்கிய வீரக்கழல் அணிந்த இந்திரனது வென்றவனை (இந்திரசித்துவை) அழித்தொழித்த வீரனாகிய இலக்குவன்; அம்பொன் சடைமுடி அடியது ஆக - தனது அழகிய பொன்ம யமான சடா மகுடம் பரதனது அடியில் விழும்படி; துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும் தோலின் வினை உறு செருப்புக்கு ஈந்தான்- விரைந்து செல்லும் குதிரை, யானை, தேர், வாகனம என்று இவைகள் எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத் தோலாற செய்த தொழில் திறம் அமைந்த இராமனது பாத அணிக்குத் தந்தவனாகிய பரதனது; விரை மலர்த்தாளின் வீழ்ந்தான் - மணம் வீசும் மலர் போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான். | பாதுகையை அரசாள வைத்த தன்மையை நயமாகக் குறித்தமை உணர்ந்து இன்புறத் தக்கது. | (329) | 10281. | ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட, | | தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் - | | 'தனிமை நீங்கி, | | காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை | | கூர | | நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?' | | என்று உலகம் நைய. | | (பரதன், அவனை) ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட- தாமரை போன்ற கண்களின் உள்ளே இருந்து பெருகுகின்ற கண்ணீரானது நாலா பக்கங்களிலும் பரந்து சிதறி |
|
|
|