ஓட; தனிமை நீங்கி காடு உறைந்து உலைந்த மெய்யோ? - இராமனைப் பிரிந்த தனிமையிலிருந்து விடுபட்டு அவனுடனே சென்று காட்டின்கண் அவனோடு தங்கி வருந்திய இலக்குவனது உடம்போ; கையறு கவலை கூர நாடு உறைந்து உலைந்து மெய்யோ- செயலற்ற பிரிவுத்துன்பம் மேலும் மேலும் மிகுதலால் அயோத்தி நாட்டு நந்திக் கிராமத்தில் தங்கி உண்பதும் உறங்குவதும் இன்றி வருந்திய பரதனது உடம்போ; நைந்தது?- எது மிகவும் வருந்தியது;என்று உலகம் நைய - என்று உலகம் இருவரையும் ஒருசேரப் பார்த்து வருந்தும்படி; தாள் தொடு தடக்கை ஆரத் தழுவினன்- முழந்தாள் அளவு நீண்ட தன் கைகளால் நன்றாகத் தழுவிக் கொண்டான். |
பரதன் இலக்குவனைத் தழுவி நின்ற காட்சி கண்டு உலகம் வருந்தியபடி. |
(330) |
சத்துருக்கன் மூவரையும் பணிதல் |
10282. | மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த |
| கையன், |
| தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் |
| தாளும், |
| பூவர்க்கும் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் |
| பொருந்தப் புல்லி, |
| வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து |
| வீழ்ந்தான். |
|
மூவர்க்கும் இளைய வள்ளல்- மூவர்க்கும் இளையவனாகிய சத்துருக்கன்; முடிமிசை முகிழ்த்த கையன் - தலைமேற் கூப்பிய கையுடையவனாய்; தேவர்க்கும் தேவன் தாளும் - இராமன் திருவடி; செறிகழல் இளவல் தாளும் - கட்டிய கழல் உடைய இலக்குவன் திருவடி; பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் - ஆகியவற்றில் மலர் மழை பொழிந்து விழுந்து வணங்கினான்; பொருந்தப் புல்லி எடுத்தனர் - அவர்கள் அவனை நன்கு தழுவித் தூக்கினர் (பின்னர் அவன்); வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான் - பொய்கையில் வாழும் அன்னம் போன்ற சீதையின் மலர் போன்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். |
(331) |