துணைவர்களை அறிமுகப் படுத்தல் |
10283. | பின் இணைக் குரிசில்தன்னைப் பெருங் கையால் |
| வாங்கி, வீங்கும் |
| தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் |
| தம்பிமாருக்கு, |
| இன் உயிர்த் துணைவர்தம்மைக் காட்டினான்; |
| இருவர் தாளும், |
| மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் |
செய்தார். |
|
பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கி - தன் தம்பியும் பரதனோடு இணையாக உள்ளவனும் ஆகிய சத்துருக்கனைத் தனது நீண்ட கைகளால எடுத்து; வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி- பருத்த தனது இரண்டாகிய தோள்கள் முழுகும்படி அணைத்து; அத்தம்பிமாருக்கு - அந்த பரத சத்துருக்கனர்களுக்கு; இன் உயிர் துணைவர் தம்மைக் காட்டினான் - இனிய உயிர் போன்ற தனது துணைவர்களாகிய சுக்கிரீவ, வீடணர்களைக் காட்டி அறிமுகம் செய்வித்தான்; மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் - உலக உயிர்களுக்கு உவமைச் சிறப்பு உண்டாகும்படி வந்தவர்களாய அவர்கள்; இருவர் தாளும்- பரத சத்துருக்கனர் தாள்களை; வணக்கம் செய்தார்- வணங்கினார்கள். |
துணைவர் என்பது இருவரைக் குறித்தது. குகனையன்று. அவன் முன்பே அறிமுகமாதலின். |
(332) |
10284. | குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, |
| சாம்பன்தன்னை |
| செருக் கிளர் நீலன்தன்னை, மற்றும் அத் |
| திறத்தினோரை, |
| அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் |
| முதன்மை கூறி, |
| மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன், |
| நின்றான்.* |
|
மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன்- மணம் வீசும் கட்டமைந்த மாலை அணிந்த மார்பினை உடைய பரதன்; |