பக்கம் எண் :

 மீட்சிப் படலம்597

குரக்கினத்து அரசை  -  சுக்கிரீவனை;  சேயை  -  அங்கதனை;
குமுதனை சாம்பன்  தன்னை  செருக்கிளர்   நீலன்   தன்னை-;
மற்றும்   அத்திறத்தோரை  
-    வேறு   அத்தகையவர்களை;
அரக்கருக்கு அரசை- வீடணனை; வெவ்வேறு அடைவினின்-
அவரவர்க்கு உரிய முறைப்படி;   முதன்மை   கூறி   -   உபசார
வார்த்தைகள் கூறி; நின்றான். 
 

(333)
 

சுமந்திரன் வருதல்
 

10285.

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு 

தானைத்

தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்

சிந்துரக் களிறு போல்வார் எவரொடும்,  

சேனையோடும்,

சுந்தரத்தடந் தோள் வெற்றிச் சுமந்திரன்

தோன்றினானால்.*

 

சுந்தரத் தடந்தோள் வெற்றிச்  சுமந்திரன்-  அழகிய
அகன்ற தோள்களை உடைய வெற்றியுடைய சுமந்திரன் என்னும்
முதல் அமைச்சன்; மந்திரச்  சுற்றத்துள்ளார் தம்மொடும்-
மந்திராலோசனைச்     சபையில்   இருத்தற்குரியோர்களோடும்;
வயங்கு தானைத் தந்திரத் தலைவரோடும்- விளங்கிய சேனைத்
தலைவர்களோடும்; தமரொடும்  -  ஏனைய  சுற்றத்தினரோடும்;
தரணி ஆளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும்
உலகை  ஆளும்  சிந்தூரம்  அணிந்த  ஆண்யானை  போன்ற
மன்னர்களோடும்; சேனையோடும் தோன்றினான்.
 

ஆல் - அசை. 
 

(334)
 

10286.

அழுகையும், உவகைதானும் தனித்தனி அமர் செய்து 

ஏற,

தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன்  

நிற்றலோடும்,

தழுவினன் இராமன், மற்றைத் தம்பியும் அனைய  

நீரான்,

'வழு இனி உளது அன்று, இந்த மா நிலக்கிழத்திக்கு' 

என்றான்.*