சுமந்திரன்-; அழுகையும் உவகை தானும் தனித்தனி அமர் செய்து ஏற - அழுகையும் மகிழ்ச்சியும் தனித்தனியாக ஒன்றோடொன்று போட்டியிட்டு மேலே மிக; எழுந்து விம்மி தொழுதனன் நிற்றலோடும்- நின்று துடித்து வணங்கி நின்ற அளவில்; இராமன் தழுவினன் - இராமன் தழுவினன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான் - இலக்குவனும் அதுபோலவே தழுவினன் (பின்னர் சுமந்திரன்); இந்த மாநிலக் கிழத்திக்கு- இந்த நிலமகளுக்கு; இனி வழு உளது அன்று என்றான் - இனித்துன்பம் இல்லை என்று மகிழ்ச்சி கூறினான். |
இறுதியாக வனத்தில் இராமனைவிட்டு வந்தவனாதலின் மீண்டும் காணப் பெற்றபோது அழுகை உவகையும் போட்டியிடுவனவாக ஆனான் சுமந்திரன். |
(335) |
10287. | 'ஏறுக சேனை எல்லாம் விமானமீது' என்று, |
| தன்போல் |
| மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம் |
| ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் |
| ஒடுங்குமாபோல் |
| ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது |
| அன்றே. |
|
தன் போல் மாறு இலா வீரன்- தனக்கு ஒப்பாக மற்று ஒன்று இல்லாத பெருவீரனாகிய இராமபிரான்; சேனை எல்லாம் விமானம் மீது ஏறுக என்று கூற- எல்லாச் சேனைகளும் விமானத்தின் மேல் ஏறட்டும் என்று கட்டளையிட; வந்துள அனிக வெள்ளம் - வந்த சேனைப் பெருக்கு; ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமா போல்- மேலும் மேலும் ஊறுகின்ற கடல் விண்ணில் உள்ள மேகத்துள் ஒடுங்குவதைப் போல; ஏறி - விமானத்தில் ஏறி; இளைய வீரன் இணை அடி தொழுதது- இலக்குவனது திருவடிகளை வணங்கியது. |
அன்று, ஓ - அசை. |
(336) |
10288. | 'உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி |
| உதரம் ஒவ்வா, |
| கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா, |