வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் - வெந்த புண்ணில் வேல் பட்டாற் போன்ற கொடுந்துன்பத்தை அடைந்தவனான இராவணன்; 'மைந்தவோ!' எனும் 'மாமகனே!' எனும்- 'மைந்தா ஓ!' என்பான்; சிறந்த மகனே! என்பான்; 'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும் - 'என் அப்பா ஓ!' என்பான்; 'என் உயிரே!' என்பான்; 'உனை முந்தினேன்; நான் உளனோ!' எனும்- 'உனக்கு முன்னர் உயிர் விட வேண்டியவனாகிய நான் இன்னும் இருக்கின்றேனே' என்பான். |
கும்பகருணனை இழந்த துன்பம் வெந்தபுண் போன்றது எனவும், இந்திரசித்தனை இழந்த துன்பம் அப்புண்ணில் வேல் நுழைந்தது போன்றதெனவும் கொள்க. 'ஓ' என்பது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச் சொல். மகனை எந்தை என்பது அன்பு பற்றி வந்த வழுவமைதி. |
(10) |
9196. | 'புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்; |
| 'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும்; |
| 'கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும், |
| நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும். |
|
புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்- 'இந்திரனது பகை போயிற்று அல்லவோ!' என்பான்; 'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும்;- (நம்மால்) துன்பமடைந்த தேவர்கள் (துன்பம் நீங்கி மகிழ்ச்சியால்) ஆரவாரித்தனரோ?' என்பான்; 'கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்- 'கரந்தையைச் சூடிய சிவனும் பாற்கடலில் ஒளிந்துகொண்டுள்ள திருமாலும்; நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும் - நிரந்தரமாகத் தம் பகை நீங்கப் பெற்றனரோ?' என்பான். |
அரந்தை - துன்பம், கரந்தை - கரந்தை மலர், திருநீற்றுப்பச்சை நிரந்தரம் - இனி எப்பொழுதும், இந்திரன், சிவன், திருமால் என்போர் இந்திரசித்தனுக்கு அஞ்சி அடங்கி இருந்தவர் இனி அச்சம் தீர்ந்து மகிழ்வர் என்றவாறு. |
(11) |
9197. | 'நீறு பூசியும் நேமியும் நீங்கினார், |
| மாறு குன்றொடு வேலை மறைந்துளார், |
| ஊறு நீங்கினராய், உவணத்தினோடு |
| ஏறும் ஏறி, உலாவுவார்' என்னுமால்.* |