ஊழிக்காற்று போல விரைந்து; கடப்பவன் வாலி என்போனை அறிதிர் அன்றே? - கடந்து செல்பவனாகிய வாலி என்பவனை அறிவீரன்றோ? எழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை - ஏழு குல மலைகளையும் எடுக்கவல்ல மிடுக்கினை உடைய அவ்வாலியை; இந்நாள் ஓர் பகழி பாழி மார்பு அகம் பிளந்தது உயிர் குடித்தது - இந்நாளில் இராமனுடைய ஓர் அம்பு வலிமை மிக்க மார்பகத்தைப் பிளந்து உயிரைக் குடித்தது. |
ஏழு மலைகளாவன, கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பவை. |
(41) |
9288. | 'இங்கு வந்து நீர் வினாயது என்? எறி திரைப் |
| பரவை |
| அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ? |
| கங்கைசூடிதன் கடுஞ் சிலை ஒடித்த அக் காலம், |
| உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? |
|
நீர் இங்கு வந்து வினாயது என்- நீர் (இரு மனிதரின் ஆற்றலைப்பற்றி) இங்கு வந்து வினவியது என்? எறி திரைப் பரவை அங்கு வெந்திலதோ?- இராமனுடைய அக்கினிக்கணையால் அலை வீசுங்கடல் அங்கு வேகவில்லையோ? சிறிதும் அறிந்ததும் இலிரோ?- அது இராமனால் நிகழ்ந்தது என்பதைச் சிறிதும் அறிந்ததும் இல்லீரோ? கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம் - கங்கையைச் சடையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை (இராமன் சீதையை மணக்கும் பொருட்டு) ஒடித்த அக்காலத்து; முழங்கு ஓதை உங்கள் வான் செவி புகுந்திலதோ?- (அவ்வில் ஒடிந்ததாலாய) முழங்கும் பேரொலியானது உங்களது சிறந்த செவியில் புகுந்திலதோ? |
கடல் வெந்தமை கண்டும், வில்லொடித்த ஓசையைக் கேட்டும் இவற்றிற்குக் காரணம் தெரிந்திருக்க வேண்டிய நீர் இங்கு வந்து வினவுவது என்? என்கின்றான் மாலியவான். |
(42) |
9289. | 'ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு, இலங்கையின் |
| அளவில், |
| தீயின் வெய்ய போர் அரக்கர்தம் சேனை; அச் |
| சேனை |