பக்கம் எண் :

602யுத்த காண்டம் 

வீடணன் முதலியோர் செல்லுதல்
 

10293.

வீடணக் குரிசில், மற்றை வெங் கதிர்ச் சிறுவன், 

வெற்றிக்

கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் 

மருங்கு செல்ல,

தோடு அணை மவுலிச் செங் கண் வாலி சேய் தூசி 

செல்ல,

சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான்.* 

 

வீடணக் குரிசில்- வீடணனாகிய சிறப்பு  மிக்கவனும்; மற்றை
- பின்னும்;வெங்கதிர்ச்   சிறுவன்- வெப்பம்  உமிழும்  கதிரவன்
மைந்தன் சுக்கிரீவனும்; வெற்றிக்கோடு அணை- (போரில்) வெற்றி 
தேடித் தரும் கொம்புகளை உடைய; குன்றம் ஏறி - மலை போன்ற
யானை மீது இவர்ந்து; கொண்டல் தேர் மருங்கு செல்ல - முகில்
வண்ணனான இராமபிரானின் தேருக்கு அருகில் செல்லவும்;  தோடு
அணை மவுலி
- மலர் செறிந்த மகுடம்  சூடிய;  செங்கண் வாலி
சேய்
- சிவந்த கண்களை உடைய வாலியின்  மைந்தன்    அங்கதன்;
தூசி செல்ல - முன்னணியிற் செல்லவும்; சேடனைப்  பொருவும்-
ஆதிசேடனுக்கு   ஒப்பான  வீர  மாருதி - வீரம் செறிந்த அனுமன்;
பின்பு சென்றான்
- பின்னர்ச் சென்றான்.
 

முன்னர்  விரிஞ்சனுக்கும்   விடை   வல்லானுக்கும்  உவமித்த
அனுமனை இங்கு ஆதிசேடனுக்கு உவமித்தார். அறிவிற்   சிறந்தவன்
சேடன். 
 

(4)
 

10294.

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல்

வரிசைக்கு ஆன்ற

திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம் 

பெறுகுற்ற வனப்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் 

செச்சை

மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர்  

போனார்.

 

வரிசைக்கு ஆன்ற திறம் உள்ள - தகுதிக்கேற்பக் கூறுபாடு
உற்ற; சிறப்பர் ஆகி  -   சிறப்பை   உடையவராகி;   மானுடச்
செவ்வி
- மனித வடிவுடன் கூடி; வீரம் பெருகுற்ற-  ஆண்மை
பொருந்திய வராகி; வனப்பர்  -  அழகு  உடையவரும்;   உச்சி
பிறங்கு வெண் குடையர்
- தலை மீது வெண்கொற்றக் குடையை
உடையவரும்;