| மீன்இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து |
| சுற்ற, |
| பூ நிற விமானம்தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் |
| போனாள். |
|
வானர மகளிர் எல்லாம்- வானரப் பெண்கள் அனைவரும்; வானவர் மகளிராய் வந்து- தேவ கன்னிகையராய் உருமாறி; ஊனமில் பிடியும் - குற்றமற்ற பெண்யானை மீதும்; ஒண்தார்ப் புரவியும்- ஒள்ளிய மாலை பூண்ட குதிரையின் மீதும்; பிறவும் ஊர்ந்து - (சிவிகை முதலிய) பிற ஊர்திகள் மீதும் ஏறிச் செலுத்தி; மீன் இனம் - விண்மீன் கூட்டம்; மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற- நிலாவைச் சுற்றிய தன்மைபோல் சூழ்ந்துவர; பூ நிற விமானம் தன் மேல்- பொலிவுடைய விமானத்தின் மீது;மிதிலை நாட்டு அன்னம் போனாள்- மிதிலை நாட்டின் அன்னம் போன்ற சீதாபிராட்டி சென்றாள். |
(7) |
10297. | தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த, |
| ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக் |
| கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த |
| ஆற்றால், |
| பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் |
| பொருந்திற்று அன்றே. |
|
தேவரும் முனிவர் தாமும் - வானவரும் முனிவர்களும்; திசை தொறும் மலர்கள் சிந்த- எல்லாத் திசைகளிலிருந்தும் பூக்களைச் சொரிய; ஓவல் இல் மாரி ஏய்ப்ப - இடையறாது மழை பொழிவதைப் போன்று; எங்கணும் உதிர்ந்து வீங்கி- எல்லா இடத்திலும் பொழிந்து பெருகி; கேவல மலராய் - மலர்கள் மட்டுமேயாக நிறைந்து; வேறு ஓர் இடமின்றிக் கிடந்த ஆற்றால்- மற்றேதும் இடம் பெற முடியாமற் கிடந்த தன்மையால்;இவ்வுலகிற்கு- இந்தப் புவிக்கு, இன்று - இந்த நாளில்;பூ எனும் நாமம் - பூ என்கிற பெயர்; பொருந்திற்று - பொருந்துவதாயிற்று; அன்று- அசை; ஏ- தேற்றம்; பூமிக்குப் பூ என்னும் பெயரமைந்தமைக்குப் பிறிதொரு காரணம் கற்பித்தார். |
(8) |