10298. | கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் |
| ஆண்டு |
| பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும |
| யானை, |
| காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து |
| உகுத்த வாரி |
| ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து |
உடைந்ததேபோல். |
|
கோடையில் - முதுவேனிற் காலத்தில்; வறந்த - நீர் வறண்ட; மேகக் குலம் என - முகிற் கூட்டம் போன்று; பதினால் ஆண்டு - (நீண்ட) பதினான்கு ஆண்டுக்காலம்; பாடு உறு மதம் செய்யாத- வெளிப்படுத்துகின்ற மதத்தைப் பொழியாமலிருந்த; பணைமுகப் பரும யானை - கொம்புகளை முகத்தில் பெற்ற சேணமமைந்த களிறுகள்; காடு உறை அண்ணல் எய்த- வனவாசம் முடித்த இராமபிரான் திரும்பி வந்தமையால்; கடாம் திறந்து உகுத்த வாரி - கன்னம் திறந்து பொழிந்த மதநீர்; உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே போல் - (அவற்றின்) மனத்துக்குள் அடக்கி வைத்திருந்த களிப்பு உடைந்து வெளிப்பட்டது போல்;ஓடின - பெருகி ஓடலாயிற்று. |
முன்னர் நகர் நீங்கு படலத்துள், தான யானையும் களி துறந்தன (கம்ப. 1806) என்றவர் இங்கு களிபெருகின என்றார். |
(9) |
10299. | துரகத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் |
| பெற்றென்ன, |
| அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் |
| ஆன்ற |
| பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும் |
| புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை |
| பூத்த. |
|
துரகத் தார்ப் புரவி எல்லாம் - கிண்கிணி மாலை யணிந்த குதிரைகள் எல்லாம்; மூங்கையர் சொல் பெற்றென்ன- ஊமையர்கள் பேசும் திறம் பெற்றாற் போலவும்; அரவப் போர் மேகம் என்ன - ஆரவார ஒலி முழக்கும் மேகங்கள் போலவும்; ஆலித்த -கனைத்தன; மரங்கள் - அனைத்து மரங்களும்; ஆன்ற |