பக்கம் எண் :

606யுத்த காண்டம் 

பருவத்தால் - பொருந்திய பருவ காலத்தில்; பூத்த என்ன-
மலர்ந்தன போன்று; பூத்தன - விரிந்தன; பகையின் சீறும்-
எதிரிகள் மீது   சினந்து   வளைவது   போல்   (வளையும்);
புருவத்தார் - புருவத்தை உடைய மகளிர்; மேனி எல்லாம் -
உடல் முழுவதும்; பொன் நிறப் பசலை பூத்த - தங்க நிறப்
பசலை படர்ந்தது.
 

பதினான்கு ஆண்டுகள் கனைக்காதிருந்த குதிரைகள் இராமன்
வருகையால் கனைக்கலாயின. 
 

(10)
 

இராமன் அரண்மனை உடைதல்
 

10300.

ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் 

அயோத்தி நண்ணி,

தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் 

தாழ்ந்து,

நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும் 

சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக்

கண்டான்.

 

ஆயது ஓர்   அளவில்  - அந்தச் சமயத்தில்; செல்வத்து
அண்ணலும்   
-  எல்லாத்  திருவும்   பொருந்திய  தலைவன்
இராமபிரானும்; அயோத்தி நண்ணி- அயோத்தி நகரையடைந்து;
தாயரை வணங்கி- தன் அன்னையாரைப்   பணிந்து;   நாயகக்
கோயில் எய்தி
- அனைத்துலக நாயகனான திருமாலின் ஆலயத்தை
அடைந்து; தங்கள் இறையொடு-   தங்கள்   குலதெய்வத்தோடு;
முனியைத் தாழ்ந்து- குல குருவான  வசிட்டரையும்   வணங்கி;
நானிலக் கிழத்தியோடும்  -   நில   மகளோடு;   சேயொளிக்
கமலத்தாளும்  
-   சிவந்த   ஒளிமிக்க   தாமரைத்   திருவும்;
திருநடம் செய்யக் கண்டான்  -   (மிக்க உவகையோடு)   களி
நடம் புரிவதைக் கண்ணுற்றான்.
 

நாயகக் கோயில் - அரண்மனையும் ஆகலாம். 
 

(11)
 

நகரமாந்தர் மகிழ்ச்சி
 

10301.

'வாங்குதும் துகில்கள்' என்னும் மனம் இலர், 

கரத்தின் பல்கால்

தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,