பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்607

வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல்  

துள்ளி

ஓங்கவும், களிப்பால் சோர்ந்த உடை இலாதாரை 

ஒத்தார்.

 

துகில்கள் வாங்குதும் என்னும் - ஆடைகளைக்  களைந்து
விட வேண்டும் என்னும்; மனம் இலர் - எண்ணமில்லாதவரான;
மைந்தரும்  தையலாரும்  -  (அயோத்தி  நகர்)  ஆண்களும்
பெண்களும்; களிப்பால் -  இராமனைக்  கண்ட  மகிழ்ச்சியால்
(தளர்கின்ற ஆடையை);  கரத்தின்-  தம்  கரங்களால்; பல்கால்
தாங்கினர்  என்ற  போதும்
- பன்முறையும் தாங்கி நின்றார்கள்
என்ற போதிலும்; வீங்கிய  உவகை- பெருகிய மகிழ்ச்சியால்;
மேனி சிறக்கவும் - உடல் பூரித்தலால்; மேன்மேல் துள்ளி
ஓங்கவும்
- மேலும் மேலும் துள்ளிப் பாய்தலாலும்   சோர்ந்த
உடை  இலாதாரை ஒத்தார்
- நெகிழ்ந்த ஆடையற்ற திகம்பரரை
ஒத்திருந்தார்கள்.
 

சமணரில் திகம்பரர் ஆடை அணியாதவர் ஆவர். 
 

(12)
 

10302.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற, வெற்றிப் 

பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற, 

வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, 

மயக்கம்தன்னால்

பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 

  

வேசியர் உடுத்த   கூறை   -   கணிகையர்   உடுத்திருந்த 
சேலையினை (தடுமாற்றம் நேர்ந்தமையால்); வேதியர்   சுற்ற   -
வேதியர்கள் தரிக்கவும்;  வெற்றிப்   பாசிழை மகளிர் ஆடை-
ஊடலில் வெற்றி கொள்ளும்   பசிய   பொன்னணிகள்   அணிந்த
பெண்களின் ஆடையினை; அந்தணர் பறித்துச் சுற்ற- அந்தணர்
வலிந்து பறித்துச் சுற்றிக்   கொள்ளவும்;   வாசம்  -   நறுமணப்
பொருள்களும்; மென் கலவைச் சாந்து  -   மெல்லிதாய்   நறும்
பொருள்கள் கலந்து அரைத்த   சாந்தும்;   என்று   இனையன-
என்னும் இவற்றை; பூசலார் - பூசிக் கொள்ளாது; புகுந்துளோரும் 
- வந்தவர்களும்;    மயக்கம்  தன்னால் -  மக்களின்  உவகை
மயக்கத்தால்; பூசினர்க்கு இரட்டி ஆனார் - (மணப் பொருள்கள்)
பூசியவரைக் காட்டிலும் இருமடங்கு அப்பிக் கொண்டார்கள்.
 

(13)