10303. | இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ் - இரண்டு |
| ஆண்டும், யாரும் |
| உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த |
| மின்னார், |
| பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை |
| மகளிர், மெய்யை |
| மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு |
| மறுக்கம் தோன்ற. |
|
இறை- ஆட்சியாகிய; பெருஞ்செல்வம் நீத்த - பெருந்திருவினை நீங்கிய; ஏழ் இரண்டு ஆண்டும் - பதினான்கு ஆண்டுக் காலத்திலும்;யாரும் உறைப்பு இலர் ஆதலானே - அனைவரும் மனமகிழ்ச்சியற்றிருந்தவர்களாதலால்; வேறு இருந்து ஒழிந்த - (கணவருடன் கூடாது) தனித்திருந்து; கழித்த; பிறைக் கொழுந்து அனைய நெற்றி - இளம் பிறை போன்ற நெற்றியினை உடைய; மின்னார்- மின்னலைப் போன்றவரும்; பெய்வளை மகளிர் - வளையல் அணிந்தவருமான பெண்கள்; மைந்தர்- ஆண்மக்களுடைய; உயிர்க்கு மறுக்கம் எய்த- உயிருக்குக் கலக்கம் ஏற்படுமாறு; மெய்யை - தம் உடலை; பூணில் மறைத்தனர் - அணிகலன்களால் மூடிக் கொண்டனர். |
(14) |
10304. | விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், |
| வேறுளோர்தம் |
| தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால், |
| மண் உறை மாதரார்க்கும் வான் உறை |
| மடந்தைமார்க்கும், |
| உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கி ஊடல் உண்டாயிற்று |
| அன்றே. |
|
விண் உறைவோர் தம்- வானுலகில் வாழ்கின்றவர்களின்; தெய்வ வெறியொடும்- தெய்வீக நறுமணத்தோடும்; வேறுளோர் தம் - (மற்ற) மனித உலகத்தவர்களின்; தண்நறு நாற்றம்- குளிர்ந்த நறுமணம்; தம்மில் தலைதடுமாறு நீரால் - தமக்குள் கலந்து வீசும் தன்மையால்; மண் உறை மாதரார்க்கும் - மண்ணுலகத்துப் பெண்களுக்கும்; வான் உறை மடந்தைமார்க்கும் - விண்ணுலக |