பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்609

மாதர்கட்கும்; உள் நினைந்து உயிர்ப்பு வீங்கி - உள்ளே
(வெறுப்பு) பெருகிப் பெரு மூச்சாய் வெளிப்பட்டு; ஊடல்
உண்டாயிற்று
- பிணக்கு ஏற்பட்டது.
 

அன்று, ஏ - அசை.
  

(15)
 

10305.

ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை, அருளின் 

நோக்கி,

'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும்,

தொல்லை

மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்

நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி'

என்றான்.*

 

ஆயது   ஓர் அளவில்-   அந்தப்  பொழுதில்; ஐயன்-
இராமபிரான்; பரதனை அருளின் நோக்கி - பரதனை அன்புறப்
பார்த்து; 'தூய வீடணற்கும் - உளந்தூய வீடணனுக்கும்; மற்றை
- மற்றும்;   சூரியன்   மகற்கும் -  கதிரவன்   மைந்தனான
சுக்கிரீவனுக்கும்;   தொல்லை  மேய -  பழமை    வாய்ந்த;
வானரர்கள்  ஆய  வீரர்க்கும் -   வானர  வீரர்களுக்கும்;
பிறர்க்கும்  -  மற்றையோருக்கும்;   நம்தம்-   நம்முடைய;
நாயகக் கோயில் உள்ள- முதன்மை வாய்ந்த அரண்மனையில்
அமைந்துள்ள;   நலம்   எலாம்  தெரித்தி-   சிறப்புக்கள்
எல்லாவற்றையும்    விளக்குவாயாக;   என்றான் -   என்று
கூறினான்.
 

(16)
 

10306.

என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் 

யாவரோடும்

சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில்

தெய்வப்

பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும்

மேருக்

குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில்

புக்கான்.*

 

என்றலும்- இவ்வாறு இராமன் கூறுதலும்;இறைஞ்சி - (பரதன்)
வணங்கி;     மற்றைத்   துணைவர்கள்   யாவரோடும்-   பிற
அன்பர்கள் அனைவரோடும்; எழுந்து சென்றனன்- எழுந்து