| போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம், |
| ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால். |
|
இலங்கையின் அளவில் தீயின் வெய்யபோர் அரக்கர் தம் சேனை - இலங்கையின் எல்லையில் நெருப்பினும் கொடியவர்களாய்ப் போராற்றும் அரக்கர் தம் சேனை; ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு அச்சேனை போயது - ஆயிரம் பெருவெள்ளம் உண்டு அச்சேனை அழிந்துபோயது; அந்தகன் புரம்புக நிறைந்தது போலாம் - எமபுரத்தில் அது நிறைந்தது போலும்! ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்தவில் இரண்டால்- (இவ்வளவும் செய்தவை) முந்நூல் பொருந்திய மார்பினர் ஆகிய இராம இலக்குவர் எய்த வில் இரண்டே ஆம். |
(43) |
9290. | 'கொற்ற வெஞ் சிலைக் கும்பகன்னனும், நுங்கள் |
| கோமான் |
| பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும், |
| மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்; |
| இற்றை நாள் வரை, யானும் மற்று இவனுமே |
| இருந்தேம். |
|
கொற்றை வெஞ்சிலைக் கும்பகன்னனும்- வெற்றியே பெறுதற்குரிய கொடிய வில்லையேந்திய கும்பகன்னனும்; நுங்கள் கோமான் பெற்ற மைந்தரும் - நும் அரசனாகிய இராவணன் பெற்ற மைந்தரும்; பிரகத்தன் முதலிய பிறரும்- பிரகத்தன் முதலிய பிறரும்; மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் - மற்றைய வீரர்களும், இந்திரசித்தோடு மடிந்தார்கள்; இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தேம்- இன்று வரையில் யானும் இந்த இராவணனுமே மடியாதிருந்தோம். |
(44) |
9291. | 'மூலத் தானை என்று உண்டு; அது மும்மை நூறு |
| அமைந்த |
| கூலச் சேனையின் வெள்ளம்; மற்று அதற்கு இன்று |
| குறித்த |
| காலச் செய்கை நீர் வந்துளீர்; இனி, தக்க கழலோர் |
| சீலச் செய்கையும், கலிப் பெருஞ் சேனையும், |
| தெரிக்கில். |