புறப்பட்டவனாகி; மாடம் பல ஒரீஇ- பல மாட கூடங்கள் தாண்டி; உலகில்- அனைத்துலகங்களிலும்; பொன் திணிந்து- (சிறந்த) பொன் செறிந்து; அமரரோடும் பூமகள் உறையும்- தேவர்களோடு திருமகளும் உறைகின்ற; மேருக்குன்று என- இமயமலை போன்று;விளங்கித் தோன்றும் - ஒளிபெற்றுத் திகழும்; தெய்வ நாயகக் கோயில் புக்கான்- தெய்வத்தன்மை பொருந்திய தலைமை அரண்மனைக்குச் சென்றான். |
(17) |
10307. | வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம் முதலாய் உள்ள |
| செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை |
| சுற்ற, |
| உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட, |
| மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி |
| நின்றார். |
|
மயர்வு அறு மனத்து வீரர் - கலக்கமற்ற மனம் படைத்த வீடணன் முதலாம் வீரர்கள்; வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள - வைரம், மாணிக்கம், நீலம், மரகதம் தொடக்கமாய் உள்ள; செயிர் அறுமணிகள் ஈன்ற- குற்றமற்ற மணிக்கற்கள் தந்த; செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற - வளமான ஒளிக்கிரணங்கள் தம்மைச் சூழவும்;உயிர் - தமது உயிர்; துணுக்குற்று - திடுக்கிட; நெஞ்சும் உள்ளமும் ஊசலாட - மனமும் உணர்வும் தடுமாற; இமைப்பிலர் - இமைக்கவும் மறைந்தவர்களாய் மயங்கி நின்றார்- மயக்கம் கொண்டு நின்றார்கள். |
(18) |
10308. | விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் |
| மாடம் |
| கண்டனர்; பரதன் தன்னை வினவினர், அவர்க்கு, |
| 'காதல் |
| புண்டரீகத்துள் வைகும் புராதனன், கன்னல் |
| தோளான், |
| கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் |
| கொடுத்தது' என்றான்.* |
|
விண்டுவின் மார்பில் - திருமாலின் மார்பினில்; காந்தும் மணி என- ஒளி விடும் கௌத்துவ மணி போன்று; விளங்கும் மாடம் |