கண்டனர்- திகழும் மாடத்தைக் கண்டவர்கள்; பரதன் தன்னை வினவினர் - பரதனிடம் அது குறித்துக் கேட்டனர்; அவர்க்கு - அவர்களிடம் (பரதன்); 'புண்டரீகத்துள் வைகும் புராதனன் - உந்தித் தாமரையில் வாழும் பழம் பெருமை மிக்க பிரமதேவன்; கன்னல் தோளான்- கரும்பு போல் இனிமை மிக்க தோள்களை உடைய இட்சுவாகு மன்னனுக்கு; கொண்ட நல் தவத்தினாலே- (அவன்) மேற்கொண்ட அருந்தவத்தைப் பாராட்டி; காதல் - அன்புடன்; உவந்து- மகிழ்ந்து; முன் கொடுத்தது- முன்னர் பரிசாகத் தந்ததாகும்; என்றான்- எனக் கூறினான். |
(19) |
10309. | 'பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த |
| பான்மைத்து |
| இங்கு இது மலராள் வைகும் மாடம்' என்று இசைத்த |
| போதில், |
| 'எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ' என்று கூறி, |
| செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம்அதனில் |
| சேர்ந்தார். |
|
பங்கயத்து ஒருவன்- தாமரையில் வைகும் ஒப்பற்ற பிரமதேவன்; இக்குவாகுவிற்கு- இட்சுவாகு மன்னனுக்கு; அளித்த பான்மைத்து- அளித்த சிறப்புக்குரிய; இங்கு இது மலராள் வைகும் மாடம் - இங்கு அமைந்துள்ள இந்த திருமகள் தங்கும் இனிய மாடம்;என்று இசைத்த போதில்- என்று பரதன் இயம்பியபோது, (வீடணாதியர்);எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ - எங்களால் புகழக் கூடி அளவினதோ இது?; என்று கூறி- என்று மொழிந்து; செங்கைகள் கூப்பி - தம் சிவந்த கரங்களால் வணங்கி;வேறு ஓர் மண்டபம் அதனில்- மற்றொரு மண்டபத்துக்கு; சேர்ந்தார்- சென்று சேர்ந்தனர். |
(20) |
10310. | இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் |
| எண்ணி எண்ணி, |
| பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி |
| 'தூயோய்! |
| கருந் தட முகிலினாற்குக் காப்பு நாண் அணியும் |
| நல் நாள் |
| தெரிந்திடாது இருத்தல் என்னோ?' என்றலும், |
| அண்ணல் செப்பும்: |