அனைய மாடத்து இயல்பு எலாம்- அந்த மாடத்தின் தன்மையை எல்லாம்; எண்ணி எண்ணி இருந்தனர்- (வீடணாதியர்) நினைந்து நினைந்து வியந்திருந்தனர்; இரவி மைந்தன் - சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன்; பரிந்தனன்- அன்பு பூண்டவனாய்; பரதனை வணங்கி- பரதனைப் பணிந்து; 'தூயோய்! - புனிதம் மிக்கவனே; கருந்தட முகிலினாற்கு- `கரிய பெரிய முகில் போலும் நிறம் படைத்த இராமபிரானுக்கு; காப்பு நாண் - (மங்கல மகுடம் புனைதற்கு) காப்பு நாணினை; அணியும் நல்நாள்- அணிந்து கொள்ளும் இனிய நாள்; தெரிந்திடாது இருத்தல் என்னோ- இன்னமும் நாங்கள் அறியமுடியாமல் இருப்பது ஏன்; என்றலும்- எனக் கேட்டலும்; அண்ணல் செப்பும் - பரதன் கூறுவானாயினன். |
(21) |
10311. | 'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் |
| தோயம் |
| தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து |
| ஓர் தன்மைத்து என்ன, |
| ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் |
| கடிதின் நோக்க, |
| சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் |
| தோன்றல். |
|
ஏழ்கடலதனில் தோயம்- ஏழு கடல்களிலிருந்து கொண்டு வரும் புனித நீரும்; பிற இருநதியில் தோயம்- வேறுள்ள பெரிய நதிகளிலிருந்து கொண்டுவரும் தீர்த்தங்களும்; தாழ்விலாது- தாமதமின்றி;இவண் வந்து எய்தற்கு - இங்கு வந்து சேருதற்கு; அருமைத்து ஓர் தன்மைத்து- அரிய தன்மையுடையது;என்ன - என்று (பரதன்) கூற; ஆழி ஒன்று உடையோன் மைந்தன் - ஒற்றைச் சக்கரத் தேரினனான சூரியன் புதல்வன் (சுக்கிரீவன்); அனுமனைக் கடிதின் நோக்க- அனுமனை விரைந்து பார்க்கவும்; காலின் தோன்றல்- காற்றின் மைந்தனாகிய அனுமன்; சூழ் புவி அதனை எல்லாம் - கடல் சூழ் உலகத்தின் (தொலைவை) எல்லாம்; கடந்தனன்- உடன் கடந்து சென்றான். |
(22) |
10312. | 'கோமுனியோடு மற்றைக் கணிதரைக் கொணர்க!' |
| என்னா |
| ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் |
| ஈன்ற |