பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்613

பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,

யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது

நின்றார்.

 

கோமுனியோடு- தலைமை வாய்ந்த வசிட்ட முனிவரோடு; மற்றை
- பிற; கணிதரைக் கொணர்க -    சோதிடரையும் அழைத்து வருக;
என்னா - என்று;    ஏவினன்  -   (பரதன்)     அமைச்சருக்குக்
கட்டளையிட்டான்;   தேர் வலான் -   தேர் செலுத்துவதில் வல்ல
(அமைச்சன்) சுமந்திரனும்;   சென்று    இசைத்தலும் - சென்று
முனிவரிடம் கூறியதும்; உலகம்    ஈன்ற     பூமகன் - உலகைப்
படைத்த பிரம தேவன்;   தந்த  அந்தப் புனித மாதவன் - பெற்ற
அப்புனித   மாமுனி    (வசிட்டனும்);    வந்து     எய்த - வந்து
சேர்தலும்; யாவரும்     எழுந்து போற்றி- அனைவரும் எழுந்து
துதித்து; இணைஅடி தொழுது நின்றார்-     அடியிணை வணங்கி
நின்றனர்.
 

(23)
 

10313.

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த

அந்தப்

பெரியவன், அவனை நோக்கி, 'பெரு நிலக்

கிழத்தியோடும்

உரிய மா மலராளோடும் உகந்தனர் ஒருவு இல்

செல்வம்

கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை'

என்றான்.

 

அரியணை ஈய - சிங்காதனம் இடவும்; அதன் கண் ஆண்டு
இருந்த
- அதன் மீது அங்கே அமர்ந்த;   அந்தப் பெரியவன்-
அந்தப் பெருந்தகை; அவனை நோக்கி-     பரதனைப் பார்த்து;
'பெரு
நிலக் கிழத்தியோடும் -    பூமிப் பிராட்டியோடும்; உரிய
மாமலராளோடும் - பொருந்திய திருமகளோடும்;   உகந்தனர்-
உவந்திருந்து;ஒருவு இல் செல்வம்- அழியாப் பெருஞ்செல்வம்
(நுகர்ந்து); கரியவன்- கரு  நிறத்து   இராமன்;   உய்த்தற்கு -
ஆட்சி நடத்துதற்கு; ஒத்த காப்பு நாள்-       இசைந்த காப்பு
அணியும் நன்னாள்; நாளை- நாளைய தினமாகும் ; என்றான் -.
 

(24)
 

10314.

இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற

மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து

விட்டார்-