| எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, |
| ஆங்கு |
| அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது |
| சொன்னார்.* |
|
அவ்வயின்- அப்பொழுது; முனிவனோடும்- வசிட்ட முனிவனோடு; அரியின் சேயும்- சூரியன் புதல்வன் சுக்கிரீவனும்; செல்வியின் நிருதர் கோனும்- செம்மை மிக்க அரக்கர் தலைவன் வீடணனும்; சாம்பனும் - சாம்பவந்தனும்; வாலிசேயும் - வாலியின் புதல்வன் அங்கதனும்; எவ்வம் இல் ஆற்றல் வீரர்- குற்றமற்ற வல்லமைமிக்க வீரர்கள்; யாவரும் - அனைவரும்; ஆங்கு- அவ்விடத்தில்; அவ்வியம் அவித்த சிந்தை - பொறாமை அகற்றிய உள்ளம் படைத்த; அண்ணலை - இராமபிரானை; தொழுதுசொன்னார் - வணங்கி (முடிசூட்டு நாள் குறித்துக்) கூறினர். |
(27) |
10317. | 'நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை |
| நல்நாள்; |
| காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மைமீது இயற்றுக!' |
| என்று, |
| வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் |
| வெண் பூம் |
| பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் |
| போனான்.* |
|
(வசிட்டன் இராமனிடம்) நீ மவுலி சூட- நீ மகுடன் சூட; நன்மை சால் பெருமை நல்நாள் நாளை- நலம் தரும் பெருமை சான்ற சிறந்த நாள் நாளை; காளை- (ஆதலால்) காளை போன்றவனே; நீ அதனுக்கு ஏற்ற- நீ அப்பொறுப்புக்கு ஏற்றவாறு; கடன்மை மீது இயற்றுக- கடமைகளின் மேல் கவனம் செய்க; என்று- என்று கூறி; வேளையே பொடியதாக விழிக்கும் - மன்மதனையே சாம்பலாக்கக் கண் காட்டும்; நீள் நுதலின் - நீண்ட நெற்றியை உடைய; வெண்பூம் பாளையே- வெண்ணிறத்துப் பூளைப் பூவையே; சூடுவானை- சூடுகின்ற சிவ பெருமானை; பொருவும்- நிகர்த்த; மாமுனிவன்- பெருமுனி வசிட்டன்; போனான் - சென்றான். |
(28) |