பக்கம் எண் :

616யுத்த காண்டம் 

10318.

நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று

ஓதும்

நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன்,

வணங்கு நெஞ்சன்,

கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு

எல்லாம் கொள்ளும்

மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம்

வயங்கக் கண்டான்.

 

நான்முகத்து ஒருவன் ஏவ - பிரமனாகிய ஒப்பற்றவன்
கட்டளையிட; நயன் அறிமயன் என்று ஓதும்- கலைநுட்பம்
வல்ல (தெய்வ தச்சன்) மயன் என்று அறியப்படும்;நூல் முகத்து
ஓங்கு கேள்வி
- சிற்ப நூலில்    சிறந்த      கேள்வியுடனே;
நுணங்கியோன்- நுண்மாண் நுழைபுலம் மிக்கவனாகிய; மான்
முகத்து ஒருவன்
- மான்முகம் பெற்ற ஒப்பற்றவன்; வணங்கும்
நெஞ்சன்
- வணங்கி நிற்கும் உள்ளம் படைத்தவன்; கோல்
முகத்து அளந்து
- கோல்முகம் கொண்டு அளந்து; குற்றம் செற்று
- குற்றம் களைந்து; உலகு எல்லாம் கொள்ளும்- உலகையே
தனக்குள் அடக்கும்; மண்டபம்- மண்டபத்தை;    நல்நாள்-
மங்கள நாளில்; வயங்கக் கண்டான் - விளக்கமுறக்    கட்டி
முடித்தான்.
 

(29)
 

இராமன் புனித நீராட்டு
 

10319.

'சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச்

சொன்ன

ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று'

என்ன, 'ஆம்' என்று,

ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி,

ஒன்றா

ஏழ் கடல் நீரும் தந்தான், இருந்து உய்ய மருந்து

தந்தான்.

 

சூழ் - உலகைச் சூழ்ந்துள்ள;கடல் நான்கின் தோயம் -
நான்கு கடல்களின் நீரும்; எழுவகை ஆகச் சொன்ன- எழு
வகையாகக் கூறப்பட்ட; ஆழ் திரை - ஆழ்ந்த அலை கொண்ட
கடல் நீரும்;    ஆற்றின் நீரோடு -      ஆறுகளின் நீரோடு;
அமைத்தி- கொண்டு வந்து சேர்க்க; என்ன- என்று
(சுக்கிரீவன்) ஆணையிட;