இருந்து உய்ய மருந்து தந்தான் - நெடிது வாழச் சஞ்சீவி மலை மருந்து தந்தவனாகிய அனுமனும்; ஆம் என- அப்படியே செய்வேன் என்று; ஊழியின் இறுதி செல்லும்- யுக முடிவில் எழுகின்ற; தாதையின் உலாவி - சண்ட மாருதம் போல் எழுந்து சென்று; ஒன்றா - ஒரே சமயத்தில்; ஏழ்கடல் நீரும் தந்தான் - எழுகடல் நீரையும் கொணர்ந்து தந்தான். |
(30) |
10320. | எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் |
| வரிசைக்கு ஆன்ற |
| விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் |
| ஏந்தி, |
| புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, |
| பொங்கும் |
| சரயுவின் புனலும் தந்தார், சங்குஇனம் முரல |
| மன்னோ.* |
|
வேந்தர்கள் பலரும்- பல நாட்டு மன்னர்களும்;வரிசைக்கு ஆன்ற - தம் தகுதிக்கு ஏற்ப; விரிமதிக் குடையின் நீழல் - விரிந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில்; பல் நூற்று எரிமணிக் குடங்கள்- பல நூறு சுடர் மிக்க இரத்தினக் குடங்களை; யானை மேல் ஏந்தி - யானை மீதமர்ந்து ஏந்தி; புரை- உள்துளை கொண்ட;மணிக்காளம் ஆர்ப்ப- அழகிய எக்காளம் ஒலிக்க; பல்லியம் துவைப்ப- பல இசைக்கருவிகளும் முழங்க;சங்கு இனம் முரல பொங்கும்- சங்குகள் ஒலிக்க அலைகள் எழும்; சரயுவின் புனலும் தந்தார் - சரயு நீதி நீரும் கொண்டு வந்தனர். |
மின் - அசை. |
(91) |
10321. | மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் |
| சேர்த்தி, |
| ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம், |
| ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது |
| பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் |
| பொலிந்தான் மன்னோ.* |
|
மாணிக்கப் பலகை தைத்து- மாணிக்கத்தால் செய்த பலகை பொருத்தப் பெற்று; வயிரத்தின் கால்கள் சேர்த்தி - வைரத்தால் |