பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்619

மூதறிவாளர்   - பேரறிஞர்களும்;   உள்ள  சான்றவர் -
அங்கிருந்த சான்றோர்களும்; முதல்   நீராட்ட   - முதலில்
அபிடேகம் செய்தபின்; சோதியான்   மகனும் - சூரியன்
மகனாகிய சுக்கிரீவனும்; மற்றைத்    துணைவரும் - பிற
நண்பர்களும்; அனுமன் தானும்-   அனுமனும்;  தீது இலா
இலங்கை வேந்தும்
- களங்கமற்ற வீடணனும்; பின் அபிடேகம்
செய்தார்
- தொடர்ந்து அபிடேகம் செய்தனர்.
 

(34)
 

10324.

'அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த்

தவிசோன் ஆட்டும்

கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல்

ஒருவன்; இந் நாள்

சிங்கஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல்

நீர்

எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?' என்றனர்,

புலவர் எல்லாம்.*

 

'அம் கண் வான் - அழகிய வானகத்தையும்;உலகம்-
மண்ணகத்தையும்; தாய அடி- அளந்த (திருமால்) திருவடிகளை;
மலர்த் தவிசோன்- உந்தித் தாமரை வாழும் பிரமதேவன்;
ஆட்டும் கங்கை - நீராட்டிய கங்கா தீர்த்தத்தை; கண்ணுதல்
ஒருவன்
- நெற்றிக் கண் கொண்ட    ஒப்பற்ற சிவபெருமான்;
வார் சடையின் ஏற்றான் -     விரிந்த   சடையில் ஏற்றுக்
கொண்டான்; இந்நாள் - இன்று; சிங்க    ஏறு ஆனையான் -
ஆண் சிங்கம் போன்ற இராமனின்; செய்ய திருமுடி- செப்பமான
திருமுடியில்; ஆட்டும் நல் நீர் - அபிடேகமான புனித நீரை;
எங்கண் ஏற்று- எவ்விடம் ஏற்று; அன்னோன் வாழும் -
அச்சிவபெருமான் வாழ்வான்; என்றனர்- என்று கூறி
வியந்தனர்; புலவர் எல்லாம் - அறிஞர்கள் ஆனோர்
எல்லாரும்.
 

(35)
 

10325.

மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,

திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து,

செய்ய

இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும்

இருந்தது ஏய்ப்ப,

பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள்

தீர்ந்தார்.