மூலத்தானை என்று உண்டு- மூலபலப்படை என்ற ஒன்று உண்டு; அது மும்மை நூறு அமைந்த கூலச்சேனையின் வெள்ளம் - அது மூன்று நூறாக அமைந்த திரண்ட சேனையாகிய வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த காலச்செய்கை நீர் வந்துளீர்- அப்படைக்கு இன்று போர் செய்யுமாறு குறிக்கப்பெற்ற காலத்தின் செயலால் (அதற்கு உதவியாக) நீவிர் வந்திருக்கின்றீர்கள்; இனி, தக்க கழலோர் சீலச் செய்கையும் - இனித்தகுதி அமைந்த கழல் களை அணிந்த வானரப் படைத்தலைவரின் ஒழுங்கமைந்த செய்கையையும்; கவிப்பெருஞ்சேனையும் தெரிக்கில்- மிகுந்த குரங்குப்படையின் தன்மையையும் கூற வேண்டின். |
முந்நூறு வெள்ளம் மூலத்தானை போர் செய்ய வேண்டிய நாள் இன்று ஆதலின் அத்தானைக்குத் துணையாக நீவிர் வந்துளீர் என்றவாறு. மும்மை நூறு - முந்நூறு கூலம் - திரட்சி. தக்க கழலோர் - வானரப் படைத்தலைவர். சீலம் - ஒழுங்கு. கவி - குரங்கு. |
(45) |
9292. | 'ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி, |
| திருகு வெஞ் சினத்து அக்கனை நிலத்தொடும் |
| தேய்த்து, |
| பொருது, தூது உரைத்து, ஏகியது, - அரக்கியர் புலம்ப, |
| கருது சேனையாம் கடலையும் கடலையும் கடந்து. |
|
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி- ஒரு குரங்கு வந்து இலங்கையைக் கலங்குதற்குக் காரணமான தீயை மூட்டி; திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து- மாறுபட்ட சினத்தினை உடைய அக்க குமாரனையும் நிலத்தோடு தேய்த்துக் கொன்று; பொருது, தூதுரைத்து அரக்கியர் புலம்ப - போர் செய்து, தூது சொல்லி அரக்கியர் புலம்புமாறு; கருது சேனையாம் கடலையும் கடலையும் கடந்து ஏகியது - மதிக்கத்தக்க, சேனையாகிய கடலையும், பெரிய கடலையும் கடந்து சென்றது. |
ஒரு குரங்கு - அனுமன். மலங்கு எரி - கலங்குதற்குக் காரணமாகிய தீ, அக்கன் - அக்ககுமாரன், இராவணன் மகன். குரங்குதானே என எள்ளிய படைத்தலைவர்க்கு அதன் வலிமை கூறினான். |
(46) |
9293. | 'கண்டிலீர்கொலாம், கடலினை மலை கொண்டு கட்டி, |
| மண்டு போர் செய, வானரர் இயற்றிய மார்க்கம்? |