மரகதச் சயிலம்- மரகத மலை;செந்தாமரை மலர்க்காடு பூத்து- செந்தாமரை மலர்த் தொகுதி மலரப் பெற்று; திரைகெழு கங்கை - அலைகள் செறிந்த கங்கை நதியின்; வீசும் திவலையால் நனைந்து- வீசுகின்ற துளிகளால் ஈரமுற்று; செய்ய- சிவந்த; இருகுழை தொடரும் - இரு செவிக் குழைகளையும் தொட்டு மீளும்; வேற்கண்- வேல் விழி கொண்ட; மயிலொடும் இருந்தது எய்ப்ப- ஒரு மயிலோடு விளங்கியது போன்று; பெருகிய செல்வி கண்டார் - விரியும் அழகினைக் கண்டவர்கள்; பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் - பிறப்பு என்ற நோய் தீரப் பெற்றவர்கள் ஆயினர். |
(36) |
10326. | தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் |
| செய்ய, |
| ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் |
| அமைச்சரோடும் |
| நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் |
| காட்ட, |
| எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற |
| என்ன. |
|
தெய்வ நீர் ஆடற்கு ஏற்ற- புனித தீர்த்தங்கள் அபிடேகம் செய்தற்குப் பொருத்தமான; செய்வினை- சடங்குகளை; வசிட்டன் செய்ய- வசிட்ட முனிவன் இயற்றுமாறு; நோன்பின் மாதவர் - விரத வேதியர்கள்; நுனித்துக் காட்ட - நுட்பங்களைச் சுட்டிக் காட்ட; ஐயமில் சிந்தையான்- தெளிவு மிக்க சிந்தனையாளனாகிய; அச்சுமந்திரன்- அந்தச் சுமந்திரன்; அமைச்சரோடும் - அமைச்சர் பெருமக்களோடு; நொய்தினின் இயற்ற- விரைந்து பணி செய்ய; இந்திரற்கு இயன்ற என்ன- இந்திரனுக்கு அமைவது போன்று; பல்வேறு இயன்ற எய்தின- பல்வகைப் பொருள்களும் வந்து சேர்ந்தன. |
(37) |
வசிட்டன் இராமனுக்கு முடி புனைதல் |
10327. | அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் |
| ஏந்த, |
| பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற, |